இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்ட வேண்டுமா ?

“நமது நாட்டுத் தலைவர் மீது தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த ஒர் இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டி ஏன் அவமானப்படுத்த வேண்டும்?”

மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம் சரண்

லோங்யான் ரென்: அந்த 11 தனிநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நியாயம் இருக்கிறதோ இல்லையோ அதனைக் காண்பவர்கள் அச்சுறுத்தலாகவே கருதுகின்றனர். அரசாங்கத்துடன் ஒத்துப் போகாதவர்கள் மீது முழு சட்ட வலிமையையும் அரச மலேசியப் போலீஸ் படை பயன்படுத்துகிறது.

இதனால் அம்னோ/பிஎன்  வாக்குகளை குறிப்பாக இளைஞர்கள் முதன் முறையாக வாக்களிக்கின்றவர்களுடைய வாக்குகளை இழப்பது நிச்சயம்.

அர்தோங் பினாங்கு: நமது நாட்டுக்கு அது கறுப்பு தினமாகும். கைது செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் வெட்கப்பட வேண்டும். நமது நாட்டுத் தலைவர் மீது தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த ஒர் இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டி ஏன் அவமானப்படுத்த வேண்டும் ?

நமது பேச்சு சுதந்திரம் என்னவானது ? என்ன தேச நிந்தனை ?

சின்ன அரக்கன்: சர்ச்சைக்குரிய ஒரு சம்பவம் தொடர்பில் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் இளம் வயதுப் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுதான் மலேசியாவா ?

என்றாலும் ஒர் ஆறுதல். அரச மலேசியப் போலீஸ் படை செய்வது உண்மையில் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவை பெரிதும் கூட்டப் போகிறது.

ஸ்விபெண்டர்: அந்த இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டப்பட்டது, கொசுவை அடிக்க சுத்தியலைப் பயன்படுத்தியதற்கு இணையாகும்.

அரசியல் களத்தில் இரு தரப்பையும் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கையாளும் போது போலீசார் எப்படிக் கடமையாற்றுகின்றனர் என்பதை மக்கள் அணுக்கமாக் கண்காணிக்கின்றனர்.

சட்டம் பாகுபாடின்றி அமலாக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. போலீஸ் மீதும் நடப்பு நிர்வாகம் மீதும் மக்களுடைய வெறுப்பை அது அதிகரிக்கும்.

ராஜ் 5503: மலேசியர்கள் இந்த நிலைக்கு வந்து விட்டது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இளைஞர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டுகின்றனர். அவர்களை  மிரட்டுவதால் மாற்றம் ஏற்படுமா ? இரண்டு வகையான தரம் பின்பற்றப்படும் போது மக்கள் ஆத்திரமே அதிகமாகும்.

வெறுப்பு: தேர்ந்தெடுத்து வழக்குப் போடுவது– அது தான் இப்போது நடக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனையும் அம்னோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால்தான் அம்னோ அஸ்தமனமாகிறது.

X123581321: அவர் நமது ஹீரோ. அவரைக் கௌரவிக்க வேண்டும்.

குவினி: தேசிய போலீஸ் படைத் தலைவருக்கு வாழ்த்துக்கள். வன்முறையில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியைக் கண்டு பிடித்து அவருக்கு கை விலங்கு மாட்டிய உங்கள் ஆட்கள் மெச்சத்தக்கவர்கள்.

அடையாளம் இல்லாதவன் #72737246: நான் அண்மையில் ஒருவர் நாசி லெமாக் பொட்டலம் கட்டப்பட்டிருந்த காகிதத்தை கீழே எறிவதையும் அதனை இன்னொரு நபர் மிதித்ததையும் பார்த்தேன்.

பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்பட்டது பழைய பத்திரிக்கை ஆகும். பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்பட்ட அந்தப் பத்திரிக்கையில் பிரதமருடைய படம் இருந்ததால் நான் போலீசில் புகார் செய்யலாமா ?

SdnJF36784: அந்த பெண் இளம் வயதினர். ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டவர் என்பதால் அதிகாரிகள் அவர் மீது கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

வீரா: வெகு விரைவில் பிஎன் -னுக்கு எதிராக வாக்களிக்குமாறு நீங்கள் மற்றவர்களிடம் சொன்னால் கூட அது தேச நிந்தனையாகி விடக் கூடும்.

 

TAGS: