சுவரொட்டிகளை மிதித்தது: நாங்கள் எந்தப் பக்கமும் சாய மாட்டோம் என்கிறது போலீஸ்

எதிர்க்கட்சித் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மிதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி போலீஸ் விசாரிக்கும். போலீச் எந்தப் பக்கமும் சாயாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே கூறுகிறார்.

ஆனால் அங்கு ஒரு பிடி உண்டு. அதாவது தங்களிடம் புகார் செய்யப்பட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

“போலீஸ் நடவடிக்கை செய்யப்படும் புகார்களைச் சார்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”

“யாரும் புகார் செய்யவில்லை என்றால் எங்களுக்கு அந்தச் சம்பவம் பற்ரித் தெரியாது. நாங்கள் எப்படி விசாரணை செய்வது ?” என அவர் சொன்னார்.

போலீசார் அத்தகைய விவகாரங்களில் இரண்டு வகையான தரங்களைப் பின்பற்றுவதாக பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள்  தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி நிருபர்கள் கேட்ட போது முகமட் சாலே அவ்வாறு பதில் அளித்தார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அல்லது மற்ற தலைவர்களுடைய படங்களை மிதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 தனிநபர்களை போலீஸ் தேடி வருகின்றது.

இது வரையில் பலர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். தனியார் கல்லூரி ஒன்றில் ஒர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது போன்ற பல சம்பவங்களில் தனது தலைவர்கள் பாதிக்கப்பட்டும் அவற்றைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பக்காத்தான் அரசாங்கத் தரப்புத் தேர்வு செய்து வழக்குப் போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

TAGS: