இளம் வயதுப் பெண்ணின் நண்பர் ‘குற்ற ஒப்புதல்’ அறிக்கையில் கையெழுத்திட மறுத்தார்

பிரதமர் படத்தை மிதித்தது தொடர்பான விசாரணைக்காக போலீசாரிடம் சரணடைந்த  19 வயதுப் பெண்ணுடன் இருந்த ஆடவர் ஒருவர், ‘குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அறிக்கையில்’ கையெழுத்திட மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார்.

தாம் அந்த காரியத்தை செய்யாத போதும் அந்த அறிக்கையில் கையெழுத்திடுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக 20 வயதான லிம் கியான் பெங் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“அவர்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர். ” நீங்கள் அன்றைய தினம் ஒங்-உடன் கோலாலம்பூருக்குச் சென்றீர்களா ?” நான் ‘ஆம்’ எனச் சொன்னேன். அவர்கள் என்னுடைய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினர். நான் வெளியில் போகவும் மற்றவர்களையும் அழைக்கவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் என்னை ஒர் அறைக்குள் கொண்டு சென்றனர்.”

“அந்த அறையில் இருந்த போது ஒர் அதிகாரி ஒர் அறிக்கையைக் கொண்டு வந்து அதில் கையெழுத்திடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். அதில் தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4(1)(b) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் உள்ளடக்கத்தை நான் படித்தேன். அது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அறிக்கை என அறிந்தேன். நான் அதில் கையெழுத்திட மறுத்து விட்டேன்,” என்றார் அவர்.

 

TAGS: