அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அங்காடி வியாபாரிகள் விசாரிக்கப்படுகின்றனர்

பினாங்கு நகராட்சி மன்றத்தினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  எஸ்பிளனேட் அங்காடி வியாபாரிகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் 20 பேரடங்கிய குழுவை போலீசார் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் விசாரித்து வருகின்றனர்.

அந்தப் பிரிவு 10 நாட்கள் முன்னதாக தங்கள் நிகழ்வுகளை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்டதாகும்.

கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் எய்க்-கை கொண்டு வந்த மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துவக் காருக்கு சேதத்தை ஏற்படுத்தியவர்களை விசாரிப்பதும் அந்த விசாரணையில் அடங்கும் என ஜார்ஜ் டவுன் ஒசிபிடி கான் கோன் மெங் கூறினார்.

இங்-கின் கார் சேதமடைந்ததில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் விசாரிப்போம்,” என கான் சொன்னார்.

யாரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனரா அல்லது கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க கான் மறுத்து விட்டார்.

செப்டம்பர் 4ம் தேதி இரவு ஜாலான் பட்டாணியில் மாநில டிஏபி-யின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ந்த பொது மண்டபத்துக்கு வெளியில் நிகழ்ந்த ஒர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது உணர்ச்சி வசப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு கார்கள் புறப்பட்ட போது அவற்றை தாக்கியதாக சொல்லப்பட்டது.

அந்தச் சம்பவம் பற்றி மாநில டிஏபி இளைஞர் தலைவருமான இங், போலீசில் புகார் செய்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் மூன்று அதிகாரத்துவ கார்களை தாக்கியதுடன் அவர்களுடைய மூர்க்கத்தனத்தை தடுக்க முயன்ற பாதுகாப்புத் தொண்டூழியர் ஒருவரையும் அடித்ததாக அவர் அந்தப் புகாரில் கூறிக் கொண்டிருந்தார்.

இரண்டாவது துணை முதலமைச்சர் பி.ராமசாமி, மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களான லிம் ஹொக் செங், அப்துல் மாலிக் அபுல் காசிம் ஆகிய மூவரையும் அந்த கார்கள் இரவு 9 மணி வாக்கில் அந்த இடத்திருந்து கொண்டு சென்றன.

 

TAGS: