“ஒர் இளம் மலேசியர் கூட சரியானதைச் செய்துள்ளார். அம்னோ குண்டர்களும் அதனை செய்திருக்க வேண்டும்.”
பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்புக் கேட்டார்
கும்பல்1900: சாதாரண சம்பவம் ஒன்றின் மீது பாரபட்சமாக இயங்கும் அரச மலேசிய போலீஸ் படை முட்டாள்தனமாக இயங்கியுள்ள போதிலும் துணிச்சலுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள 19 வயது ஒங் சிங் யீ-க்கு மிக்க நன்றி.
அம்னோ குண்டர்களுக்கு, ஒர் இளம் மலேசியர் கூட சரியானதைச் செய்துள்ளார். அவர்களுடைய தலைவர்களும் அதனைச் செய்திருக்க வேண்டும்.
பையுவன்செங்: பெர்க்காசாவும் குத்தாட்டக்காரர்களும் ‘தேசத் துரோகத்தை’ செய்துள்ளனர். ஆனால் அது ஒகே. அவர்கள் மன்னிப்புக் கேட்கவில்லை. இஸ்லாத்துக்கு பின்னால் மறைந்து கொண்ட அந்தக் கோழைகளைப் போல் அல்லாது ஒங் துணிச்சலாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீரா: அவமரியாதையாக நடந்து கொண்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். தமது பொறுப்பற்ற நடவடிக்கையால் புண்பட்டுள்ளவர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்ட அவர் துணிச்சலையும் பணிவையும் நான் பாராட்டுகிறேன். தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வ குணம்.
முகமட் கைருல் இஸ்காண்டார்: பாஸ் தலைவர்களான நிக் அஜிஸ் நிக் மாட், அப்துல் ஹாடி அவாங் ஆகியோரது படங்கள் மீது சிறுநீர் கழித்தவர்களையும் போலீஸ் விசாரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தயவு செய்து இரட்டை வேடம் வேண்டாம்.
ஜோக்கர்: இளம் வயது பெண் ஒருவரை பிடித்துள்ள நமது நீல நிற பையன்கள் துணிச்சல் மிக்கவர்கள். நான் போலீசாரை மட்டும் கூறவில்லை. ஒங் சரணடைந்ததின் மூலமும் அது குறித்து பத்திரிக்கை அறிக்கை விடுத்ததின் மூலமும் தமது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
பெர்க்காசா- வுக்கு இது இன்னொரு வெற்றி. மசீச நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் ? முனகல் சத்தம் கூடக் கேட்கவில்லை.
ஒரே மலாய்-சியா-சியா: துணிச்சலான பெண். நீங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளீர்கள். அதனுடன் எல்லாம் நின்று விட வேண்டும். போலீஸ் படை உங்களைத் தொடர்ந்து மருட்டினால் பிரதமருக்கு எதிராக விழும் வாக்குகளே அதிகமாகும்.
பெர்க்காசா கோமாளிகளும் குதத்தைக் காட்டி உடற்பயிற்சி செய்த முன்னாள் இராணுவ வீரர்களும் அவ்வாறு முன் வந்து மன்னிப்புக் கேட்பார்களா ? பிஎன் -உடன் சம்பந்தப்பட்ட அந்த ‘கௌரவமான’ கிரிமினல்களை கைவிலங்கு போட்டு போலீஸ் கைது செய்யுமா ?
2zzzxxx: அம்னோ போலீசார் தங்கள் உண்மை நிறத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அம்னோ கருவி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த போலேலாண்டில் குற்றச் செயல்கள் பெருகி விட்டன. தங்கள் எஜமானர்களுடைய படங்களை மிதித்த இளைஞர்களை மிரட்டுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறது.
அதே நேரத்தில் அம்னோ பெர்க்காசாவும் அம்னோவின் முன்னாள் இராணுவ வீரர்கள் அது போன்ற ஏன் அதை விட மோசமான அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அம்னோ போலீசார் தங்கள் கண்களை மூடிக் கொண்டனர்.
அக்குதுவான்: பினாங்கில் முதலமைச்சருக்கு அதே காரியத்தை செய்தவர்களை என்ன செய்வது ? போலீஸ் படை ஏதாவது செய்யப் போகிறதா ? நமது இளம் தலைமுறையினர் பினாங்கில் உள்ள அரசியல்வாதிகளைக் காட்டிலும் முதிர்ச்சி அடைந்தவர்களாகத் தெரிகிறது.
வெறும் பேச்சு வேண்டாம்: பெர்க்காசா அம்னோ உறுப்பினர்கள் லிம் படத்தை மிதித்ததோடு நிற்கவில்லை. லிம் வீட்டு நுழைவாயிலில் அவரது படத்தை தொங்க விட்டு அவர் சாக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நாட்டில் ஒரளவாவது நீதி நிலைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக லிம் குவான் எங் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பினாங்கு முதலமைச்சர்.
ஆர் சுப்ரா பினாங்கு: பினாங்கில் லிம் குவான் எங் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கோலாலம்பூரில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் “பேர்கர் கடை” போட்டவர்கள் மீதும் ‘குதத்தை காட்டி பயிற்சி செய்தவர்கள்’ மீதும் பினாங்கு, கோலாலம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்காத வரையில் ஜோகூர் போலீசாரின் நடவடிக்கையை யாரும் பாராட்டப் போவதில்லை.
ஒடின்: தேச நிந்தனைச் சட்டத்தை மீறும் எண்ணம் தமக்கு இல்லை என ஒங் சிங் யீ கூறுகிறார். அந்தச் சட்டம் துல்லிதமாக என்ன சொல்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்க வழி இல்லை. எனக்கே அது பற்றித் தெரியாது. பெரும்பாலான மக்களும் அவ்வாறே.