அது மரியாதைக்குறைவான செயல்; ஆனால் தேச நிந்தனை அல்ல

உங்கள் கருத்து: “அரசாங்கம் இளைஞர்களை மிரட்டிவைக்க எந்த அளவுக்குச் செல்லும் என்பதைத்தான் இது காட்டுகிறது.அவரது செயல் மரியாதைக்குறைவானதுதான் ஆனால் தேச நிந்தனைக்குரியதல்ல.”

பிரதமர் படத்தைக் காலில் போட்டு மிதித்த பதின்ம வயது் பெண் மன்னிப்பு கேட்டார்

கோபி ஓ: மரியாதை என்பது பெறப்படுவது.அது கொடுக்கப்படுவதல்ல.ஒருவரின் படத்தைக் காலில் போட்டு மிதிப்பது மரியாதையற்ற செயல்,அவமதிக்கும் செயல்தான்.ஆனால், அது கிரிமினல் குற்றமல்ல.

அதற்காக 19வயது பெண் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.  

போலீஸ் விசாரித்து முடிவு சொல்லட்டும்.

மலேசிய பிறப்பு: அவரது செயலில் எது தேச நிந்தனைக்குரியது என்பதற்கு விளக்கம் தேவை. ஓர் அரசியல்வாதியின் படத்தை மிதித்தது முட்டாள்தனமான செயலாக இருக்கலாம் தேச நிந்தனைக்குரியதாக இருக்காது.அப்படியானால் எதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?

புதுமலேசியா: அவருக்கு எதிராக வழக்கு தொடர போலீசிடம் எதுவும் இல்லை என்பது தெரிந்த விசயம்தானே..அது தேச நிந்தனை என்றால், மன்னிப்புடன் விட்ட்டிருக்க மாட்டார்கள்.

அவர் குற்றம் செய்தாரா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்.ஆனால், நீதிமன்றம் கொண்டு சென்று குற்றம் சாட்ட ஒன்று கிடையாது.இது ஒருவகை உருட்டல் மிரட்டல்.

குஸ்நார்க்: அரசாங்கம் இளைஞர்களை மிரட்டிவைக்க எந்த அளவுக்குச் செல்லும் என்பதைத்தான் இது காட்டுகிறது.அவரது செயல் மரியாதைக்குறைவானதுதான் ஆனால் தேச நிந்தனைக்குரியதல்ல.

வெறுப்புற்றவன்: பிஎன் அரசும் போலீசும் இளைஞர்களை மிரட்டுவதில்தான் திறமையைக் காட்டுகிறார்கள்.

ஆனால், அம்னோவும் பெர்காசாவும் ஆர்ப்பாட்டம் செய்யும்போது எதுவும் செய்வதில்லை.இப்படி நடந்துகொண்டால் இளைஞர்கள் பொதுத் தேர்தலில் என்ன செய்வார்கள் தெரியுமா?பார்த்துக்கொண்டிருங்கள், பிஎன்னுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் போகிறார்கள்.

ஆனந்தம்: போலீஸ் ராஜாங்கமா நடக்கிறது? ஒருவரின் புகைப்படத்தை மிதிப்பது எப்போது தேச நிந்தனை ஆனது?

வீரா: தவறு செய்தால் கண்ணியமிக்கவர்கள் மன்னிப்பு கேட்பார்களாம்.கன்பூசியஸ் கூறுகிறார். ஒங், டிஏபி செய்தியாளார் கூட்டத்தில் மன்னிப்பு கேட்டு கண்ணியமாக நடந்து கொண்டார்.பக்காத்தான் ரக்யாட் கட்சியினர் அம்னோ போன்றவர்கள் அல்லர்.அவர்கள் இழிச் செயல்களுக்கு இடமளிக்க மாட்டார்கள்.

பெயரிலி ஏ: 15மணி நேரம் அவருக்கு விலங்கிட்டு வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒங், நீங்கள் மன்னிப்பு கேட்டது ஒரு சரியான செயல்தான்.பொதுமக்களுக்குத் தெரியும் 13வது பொதுத் தேர்தலில் என்ன செய்வது என்பது.

உண்மை: பக்காத்தான் ரக்யாட், ஒங் கைவிலங்கிடப்பட்ட படத்தைப் பெரிதாக்கி, பொருத்தமான தலைப்பிட்டு பொதுத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குட்டி பிசாசு:19வயது பெண்.தானே சென்று சரணடைந்தார்.ஆனாலும் அவரைக் காவல்காக்க  சுற்றிலும் பிஸ்டல் ஏந்திய போலீஸ்காரர்கள்.அது போதாதென்று கைகளுக்கு வில்ங்கிட்டும் வைத்திருந்தார்கள். 

 

 

 

 

TAGS: