Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இருவரைப் போலீஸ் கைது செய்துள்ளது

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இரு இளைஞர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது.

அவர்கள் இன்று பிற்பகல் மணி 2.35 வாக்கில் டாங் வாங்கி போலீ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சிஐடி துணைத் தலைவர் அஜிஸ் ஸாக்காரியா கூறினார்.

24 வயதான அவர்கள் இருவரும் தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு9(1)ன் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

அவர்கள் இன்றிரவு ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என அஜிஸ் ஸாக்காரியா வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அந்த இளைஞர்களுடன் வழக்குரைஞரும் சென்றார்

டாத்தாரான் மெர்தேக்காவில் ஆகஸ்ட் 30ம் தேதி நிகழ்ந்த தங்கள் நடவடிக்கை, தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நோக்கமாகக் கொண்டது எனக் கூறப்படுவதை தாங்கள் மறுப்பதாக அந்த இரண்டு இளைஞர்களும் வலைப்பதிவு ஒன்றில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர்.

 

டாத்தாரான் மெர்தேக்காவில் மெர்தேக்கா கொண்டாட்டங்கள் நிகழ்ந்த போது Sang Saka Malaya  கொடியை பறக்க விட்டதற்கு நானும் ஜைரி ஷாபாயுமே பொறுப்பு”, என அந்த வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

“ஜாலுர் கெமிலாங்கை (தேசியக் கொடி) Sang Saka Malaya-வுக்கு மாற்றுவது எங்கள் நோக்கமல்ல.  உண்மையில் Sang Saka Malaya கொடிதான் ஜாலுர் கெமிலாங்-காக மாற்றப்பட்டது,” என செரிகாலா செலாத்தான் என தம்மை அழைத்துக் கொண்ட அந்த வலைப்பதிவாளர் குறிப்பிட்டார்.

 

TAGS: