‘தேச நிந்தனை’ நடவடிக்கைகள்: இப்போது போலீஸ் என்ன செய்யப் போகிறது ?

“இன்றைய கால கட்டத்தில் முதியவர்களுக்குத் தார்மீகப் பொறுப்பு என்பதே கிடையாது. இருந்தும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் விரிவுரை ஆற்றும் நிகழ்த்தும் துணிச்சல் மட்டும் உள்ளது.”

இவற்றையும் ‘தேச நிந்தனை’ நடவடிக்கைகள் என போலீசார் அழைப்பார்களா

அய்யோ: வயதானவர்கள் குறிப்பாக அம்னோ-பெர்க்காசா கோமாளிகள் குரங்குகளைப் போன்று நடந்து கொள்ளும் போது இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியும். இது தான் மலேசியா என அவர்கள் எண்ணக் கூடும்.

பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் போன்றவை வழி நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற நாம் விரும்புகிறோம். அடிப்படை தார்மீகப் பண்புகளும் நாகரீகமும் இல்லாமல் நாம் பொருள் வளம் பெறுவதில் என்ன இலாபம் ?

இன, சமய, சமூக வேறுபாடுகளைக் கருதாமல் இந்த நாட்டைச் சரியான பாதையில் வழி நடத்தி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு புதிய தலைவர்கள் நமக்குத் தேவை.

ஸ்டார்: ‘எந்தப் பக்கமும் சாய்வதில்லை’ என போலீசார் சொல்வது மக்களுடைய விவேகத்தை அவமானப்படுத்துவதாகும். அது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும். பொது மக்கள் நம்பிக்கை ஒரு புறமிருக்க ஒரு படை என்ற முறையில் அவர்களிடம் நேர்மையே இல்லை.

இங்சூய்: தேச நிந்தனைக்கு அகராதியில் இவ்வாறு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது: “சட்டப்பூர்வ அதிகாரத்துக்கு எதிர்ப்பைத் தூண்டி விட்டு அரசாங்கத்தை வீழ்த்துவது அல்லது அதற்கு இடையூறு செய்வது”

சமூக அநீதிகளும் ஊழலுமே அரசாங்கங்கள் வீழ்த்தப்படுவதற்கு வழிகோலியுள்ளன. தேர்வு செய்து வழக்குப் போடுவதும் நீதியை மறுப்பதும் உண்மையில் தேச நிந்தனைக்கு உண்மையில் வித்திடுகின்றன.

உங்கள் அடிச்சுவட்டில்: மலேசியாகினி பழைய சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது நல்ல விஷயமாகும். தேர்வு செய்து விசாரிப்பது, தேர்வு செய்து கைது செய்வது, தேர்வு செய்து குற்றம் சாட்டுவது, தேர்வு செய்து வழக்குப் போடுவது என்றால் என்ன என்பதை அந்தக் கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்வு செய்து சட்டத்தை அமலாக்குவது பெரிய காயத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆட்சி ஒரு போதும் எப்போதும் கற்றுக் கொள்ளப் போவதில்லை.

கடந்த கால அத்துமீறல்களினால் இப்போது அந்த இளைஞர்கள் செய்துள்ள காரியங்களை மக்கள் அனுதாபத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில் வாக்குப் பெட்டிகள் வழி மக்களைச் சந்திக்கத் தயாராகிறதா அல்லது வேறு சிந்தனைகள் ஏதும் உள்ளனவா ?

குவிக்னோபாண்ட்: அருமையான கட்டுரை. பிரதமருடைய படம் அன்றாடம் பத்திரிக்கைகளில் வெளியாகிறது. நெருப்பைப் பற்ற வைப்பதற்கு அந்த பத்திரிக்கை பயன்படுத்தப்பட்டாலும் மீன்களையும் காய்கறிகளையும் அல்லது குப்பைகளையும் கட்டுவதற்கு அவை பயன்படுத்தப்பட்டாலும் அது தேச நிந்தனையாகுமா ?

அம்னோபறையா: மலேசியாகினி, இந்தக் கட்டுரைக்கு போலீஸ் பதில் சொல்லும் நீங்கள் எதிர்பார்க்கின்றீகளா ? அது வெறும் கனவாகவே முடியும்.

பையுவன்செங்: முதியவர்களிடமிருந்து நமது இளைஞர்கள் இப்படித் தான் கற்றுக் கொள்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் முதியவர்களுக்குத் தார்மீகப் பொறுப்பு என்பதே கிடையாது. இருந்தும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் விரிவுரை ஆற்றும் நிகழ்த்தும் துணிச்சல் மட்டும் உள்ளது.

கொக்கோமோமோ: அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் போலீஸ்  விசாரணை நடத்தி வழக்குத் தொடர்ந்தால் அவர்கள் நியாயமானவர்கள் எனக் கருதப்படலாம். பொது மக்கள் நம்பிக்கையும் கூடும்.

Xtcher: போலீசார் நடவடிக்கை எடுக்காததற்கு அடிக்கடி கூறப்படும்- ‘புகார் எதுவும் கிடைக்கவில்லை’ என்ற காரணம் என்னை உண்மையில் குழப்புகின்றது.

ஆனால் பல சமயங்களில் தாங்கள் விரும்பும் வேளைகளில்  விசாரணைகளைத் தொடங்குவதற்காக போலீசாரே புகார் செய்து கொண்டுள்ளனர்.

அவர்கள் விரும்பினால் மேலே கூறப்பட்ட சம்பவங்கள் பற்றி அவர்களே புகார் செய்து கொண்டு விசாரணைகளைத் தொடங்கலாமே ? ‘எந்தப் பக்கமும் சாய்வதில்லை’ என்பதற்கு புதிய அர்த்தம் ஏதும் உள்ளதா ?

அபாசிர்: போலீஸ் இவ்வாறு கூறலாம்: ‘அந்தச் சம்பவங்களைப் பட்டியலிட்டதற்காக மலேசியாகினிக்கு மிக்க நன்றி. ஆனால் அந்தச் சம்பவங்கள் அனைத்து சாதாரண மக்கள் சம்பந்தப்பட்டவை. நாங்கள் பாதுகாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அம்னோ கடவுள்கள் அல்ல அவர்கள்.”

ஒடின்: ஐஜிபி இஸ்மாயில் ஒமார் அவர்களே ! போலீசார் எந்தப் பக்கமும் சாய்வதில்லை என்றும் புகார் செய்யப்பட்டால் பக்காத்தான் தலைவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

பக்காத்தான் தலைவர்கள் நடத்திய செராமாக்களில் நிகழ்ந்த தாக்குதல்கள் பற்றி நிறையப் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. மாதங்கள் கடந்து விட்டன, ஆனால் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. விசாரணை நடத்தப்படவில்லை என்பதே அதன் அர்த்தம். போலீஸ் பொய் சொல்கிறது.

குழப்பம் இல்லாதவன்: இத்தகைய முட்டாள்தனமான அறிக்கைகளை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே விடுத்துள்ளதை பகுத்தறிவு உள்ள யாரும் கடுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உண்மையில் போலீசாருக்கு நடப்பு சூழ்நிலை பற்றி தெரியவே இல்லை.

 

TAGS: