சிசிஎம் சுவாராம் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தும்

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் Suara Inisiatif Sdn Bhd (Suara Inisiatif)க்கு எதிராக சுமத்தப்படுவதற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

அந்தத் தகவலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று வெளியிட்டார்.

முதலாவது குற்றச்சாட்டு இன்னும் ஒரிரு வாரங்களில் நீதிமன்றத்தில் சுமத்தப்படும் என அவர் பெக்கானில் பெக்கான் அம்னோ தொகுதி இளைஞர், மகளிர், புத்ரி பேராளர் கூட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

Suara Inisiatif-க்கு எதிரான நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டதல்ல என வலியுறுத்திய அமைச்சர் அது குற்றம் புரிந்துள்ளதாக கூறப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அந்நிய நாடுகளிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் நிதிகளைப் பெறுவதை ஒப்புக் கொண்ட சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக பல தரப்புக்கள் இதற்கு முன்னர் சிசிஎம்-மை குறை கூறியிருந்தன.

சுவாராம் அரசு சாரா அமைப்பு அல்ல என்றும் சிசிஎம்-மில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் என்றும் அதற்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

பெர்னாமா

TAGS: