“அந்த பஸ் மீது வீசப்பட்ட சாயம் அப்படியே இருக்கட்டும். நம்மிடையே முதிர்ச்சி அடையாதவர்கள் இருப்பதற்கும் வன்முறைக்கும் அது நிலையான சாட்சியாக இருக்கும். நாம் ஏன் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கும்.”
பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்புச் சாயம் வீசப்பட்டது
உண்மை 1: அந்த நடவடிக்கைகள் விரக்தி அடைந்த மூளையில்லாத அம்னோ கோமாளிகளுடைய தீய செயலாகும். அவை எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ள கோழையான கட்சி பிரதிலிக்கின்றன.
மக்களைக் கவருவதற்கு நடவடிக்கைகளை எடுக்காமல் அவர்களை மருட்டுவதற்கு அது முயலுகிறது .
முபாராக்: பிகேஆர்-க்கு ஆத்திரம் ஏற்பட்டு அது பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே அம்னோ வியூகமாகும். நெருப்புடன் நெருப்பைக் கொண்டு போராடக் கூடாது. அதற்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். எதிர்பாராத காரியத்தை செய்யுங்கள்.
அர்ட்ச்சன்: அந்த பஸ் மீது வீசப்பட்ட சாயம் அப்படியே இருக்கட்டும். நம்மிடையே முதிர்ச்சி அடையாதவர்கள் இருப்பதற்கும் வன்முறைக்கும் அது நிலையான சாட்சியாக இருக்கும். நாம் ஏன் முட்டாள்தனமான தலைவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கும்.
மூன் டைம்: அம்னோவில் விவேகமான அறிவுள்ள நியாய சிந்தனையுள்ள உறுப்பினர்கள் இனிமேல் யாரும் இல்லை என்பது இப்போது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த கால நடவடிக்கைகளையும் இப்போதைய சூழ்நிலையும் வைத்துப் பார்க்கும் போது நான் உறுதியாக இதனைக் கூற முடியும்: அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியை அம்னோ/பிஎன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சொத்துக்களைச் சேதப்படுத்துவதிலும் பொது மக்களை மருட்டுவதிலும் அச்சுறுத்துவதிலும் அது ஈடுபடக் கூடும்.
ஒடின்: இத்தகைய சம்பவங்கள் பற்றி நஜிப் எதுவும் சொல்லப் போவதில்லை. நடவடிக்கை எடுக்கப் போவதும் இல்லை. தமது ஆட்சிக் காலம் முடிவுக்கு வருகின்றது என்பது அவருக்குத் தெரியும்.
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி அடைந்தால் நஜிப் அம்னோ பாரு தலைவர் பதவியிலிருந்து விரட்டப்படுவார். பிஎன் வெற்றி அடைந்தாலும் கூட அந்தப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட மாட்டார். அதனால் அவர் பிரதமர் பொறுப்பில் இருக்க மாட்டார்.
அதனால் தான் அவர் 13வது பொதுத் தேர்தலுக்கான தேதியை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறார். சாத்தியமான காலத்துக்குப் பிரதமராக இருக்க அவர் விரும்புகிறார். அதற்கான காரணம் நமக்குத் தெரியும்.
அடையாளம் இல்லாதவன்_3e86: பக்காத்தான் பஸ் மீது எப்படி சாயம் வீசப்பட்டது என்பதைக் கவனியுங்கள். அதனை பக்காத்தான் ஆதரவாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால் பிஎன் ‘போர் வாகனத்துக்கு’ எந்த சாட்சியும் இல்லாமல் சாயம் பூசப்பட்டுள்ளது. அதனைச் செய்தது அதன் ஆட்களே என்பதால் சாட்சிகள் யாருமில்லை.
பக்காத்தான் பஸ் முழுவதும் சாயம் வீசப்பட்டுள்ளது. ஆனால் பிஎன் பஸ்ஸில் மிகவும் கவனமாக ‘பம்பரில்’ மட்டும் ‘சாயம்’ தெளிக்கப்பட்டுள்ளது.
பிஎன் வன்முறைகளுக்கு ஆதாரமாக இருப்பதற்காக பக்காத்தான் எல்லா நிகழ்வுகளையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கார்களில் மேமிராக்களையும் பொருத்த வேண்டும். பிஎன் விரக்தி அடைந்துள்ளதையே அந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அத்துடன் அது பிஎன் -னுக்கு
வாக்களிக்குமாறு மக்களை மருட்டுவதுமாகும். அது பிஎன் -னையே திருப்பித் தாக்கப் போகிறது.
பெர்ட் தான்: அந்த பஸ் இரண்டு முறை தாக்கப்பட்டுள்ளதால் அதற்கு ‘Bas Cat Merah’ எனப் பெயரிடுவோம். அடிக்கடி நிகழும் அத்தகைய அரசியல் வன்முறைகளை இது வரை பிரதமரோ அல்லது ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவரோ வெளிப்படையாகக் கண்டிக்க முன் வரவில்லை.
மெர்தேக்காவை வரவேற்கும் நிகழ்வுகளை சற்று அளவுக்கு அதிகமாக கொண்டாடிய இளைஞர்களை சுற்றி வளைப்பதற்கு சிறப்புப் பணிக்குழுவை அமைப்பதிலேயே போலீஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
அடையாளம் இல்லாதவன்#18452573: மக்கள் பார்ப்பதற்கு நல்ல உதாரணம் இதுவாகும். மே 13ம் இப்படித் தான் தொடங்கப்பட்டதோ என மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். அது எப்போதும் அம்னோவாகவே இருந்து வந்துள்ளது.
இறைவனாக வேண்டாம்: சிவப்புச் சாயத்தை வீசியவர்களுக்கு அரச மலேசியப் படை கை விலங்கு மாட்டுகின்றதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.