“ஊழலும் அதிகார அத்துமீறலும் நிறைந்துள்ள ஒர் அரசாங்கம் அத்தகைய சம்பவங்களை அம்பலப்படுத்தப் போவதாக மருட்டும் போது அந்த அரசை என்னவென்று அழைப்பது?”
சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது
ஜேஎஸ்டாம்: மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம், சங்கம் என்ற முறையில் தன்னை பதிவு செய்து கொள்வதற்குப் பல கட்டுப்பாடுகள் இருப்பதை அறிந்து கொண்டதால் தனது அரசு சாரா அமைப்பை இயக்குவதற்கு ஒரு நிறுவனத்தை அமைத்துள்ளதாக ஆயிரத்து எட்டு முறை விளக்கி விட்டது.
நிறுவனம் என்றால் வர்த்தகம் செய்ய வேண்டும் என அர்த்தம் கொள்ளக் கூடாது. அது தனது நடவடிக்கைகளுக்கு நன்கொடைகளைப் பெறலாம். அது பிஎன் அரசாங்கம் படம் போட்டிக் காட்ட முயலுவதைப் போல ‘முதலீடுகளைப் பெறும் நிறுவனம் அல்ல.”
ஆகவே அது OSF என்ற திறந்த சமூக அறக் கட்டளையிலிருந்து நிதிகளைப் பெறுவதில் என்ன தவறு ? எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அற நிறுவனமும் சுவாராமைப் போன்று நல்ல ஆளுமை, ஊழல் எதிர்ப்பு, வெளிப்படைப் போக்கு ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. அரசாங்கம் ஏன் அதனை எதிர்க்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.
கோழை இறைச்சித் துண்டு: சுவாராமை ஒடுக்க முயலுவது யாரோ ஒருவருடைய முதுகைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் கோழைத்தனமான நடவடிக்கை ஆகும். ஆனால் அது மிகவும் தாமதமானதாகும். ஏனெனில் ஸ்கார்ப்பின் ஊழலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அடையாளம் இல்லாதவன்_3fe4: ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்புடைய நிதி அமைப்பு ஒன்று சுவாராமுக்கு நிதி அளித்தால் என்ன தவறு ? அந்த நிதி நிறுவனம் என்ன பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறதா என்ன ?
தோலு: ஊழலும் அதிகார அத்துமீறலும் நிறைந்துள்ள ஒர் அரசாங்கம் அத்தகைய சம்பவங்களை அம்பலப்படுத்தப் போவதாக மருட்டும் போது அந்த அரசை என்னவென்று அழைப்பது ? ஆனால் உலகில் தலை சிறந்த ஜனநாயகம் என அது தன்னைக் கூறிக் கொள்கிறது.
ABU_sed: ஸ்கார்ப்பின் விசாரணையை ‘ஒன்றுமில்லை’ என அரசாங்கம் புறம் தள்ளியுள்ளது. என்றாலும் அந்த ‘ஒன்றுமில்லை’ விஷயத்தை முறியடிக்க நிறைய நேரத்தையும் பொது வளங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.
சாதாரணம்: அந்த இரட்டை வேஷம் போடும் உள்நாட்டு வாணிக அமைச்சர் இஸ்மாயில் யாக்கோப் தமது சகாக்களின் வங்கிக் கணக்குகளை முதலில் ஆராய வேண்டும். நியாயத்துக்குப் போராடும் மக்களை சிக்க வைப்பதற்கு முயலுவதற்கு முன்னர் அந்தச் சகாக்களின் கணக்கில் எப்படி கொழுத்த பணம் வந்தது என்பதை ஆராய வேண்டும்.
என்எச் கோங்: அம்னோ விரக்தி அடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எதிரிகளையும் தன்னைக் குறை சொல்கின்றவர்களையும் மருட்டுவதற்கு அது வெறுக்கத்தக்க எல்லா வழிகளிலும் இறங்கி வருகின்றது.
அது சொல்வது செய்வது எல்லாம் வெறுப்பைத் தருகிறது. முட்டாள்தனமானது. கிறுக்குப் பிடித்தது.
டூட்: சுவாராமை மிரட்டுவதின் மூலம் அம்னோ/பிஎன் எதனைச் சாதிக்க விரும்புகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு தான் சேற்றை அள்ளி வீசினாலும் அம்னோ/பிஎன் -னை அது நிரபராதியாக காட்டப் போவதில்லை.
கதையை மாற்றுகின்றவன்: நஜிப் அவர்களே,(அல்லது அவருக்கு சாதகம் செய்வதாக எண்ணுகின்றவர்களே) சுவாராமை எவ்வளவுதான் ஒடுக்கினாலும் வரலாறு மாறப் போவதில்லை. இதுதான் வரலாறு:
1) ஸ்கார்ப்பின் விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய தரகுப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
2) சி4 வெடி மருந்துகளைக் கொண்டு மங்கோலிய மாது ஒருவர் தகர்க்கப்பட்டார்.
3) அப்துல் ரசாக் பகிந்தா நஜிப்பின் நெருங்கிய கூட்டாளி, அப்துல் ரசாக் பகிந்தாவின் மனைவி ‘பிரதமராக விரும்புவது ரசாக் அல்ல’ என ஆத்திரத்துடன் கூச்சலிட்டுள்ளார்.
4) கொலையாளிகள் நஜிப்பின் மெய்க்காவலர்கள்.
அடையாளம் இல்லாதவன்#18452573: ஊழல் என்பது குழு விளையாட்டு என்பது நமக்குத் தெரியும். இவ்வளவு பெரிய ஊழலை நீங்கள் தனித்து நின்று செய்ய முடியாது. அந்தக் குழுவில் இஸ்மாயில் சாப்ரியும் ஒருவர். அவரும் அவரைப் போன்ற பலரும் சிறிய மீன்கள், பகடைக் காய்கள். அவர்களுடைய அரசியல் எஜமானர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தச் சிறிய மீன்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும் புதிய தூய்மையான நியாயமான அரசாங்கத்தை பெறுவதற்குக் காலம் கனிந்து விட்டது.
நல்ல மனிதர்கள்: நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மறுக்கவே முடியாது. ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேலும் மேலும் வெளிப்படையாக பகிரங்கமாகச் செய்து வருகிறது.