உரிமைகள் பற்றி எதுவும் தெரியாத அதிகாரி

ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்துக்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது தமக்குத் தெரியாது என பாரிட் கூறிக் கொண்டுள்ளார். ஆகவே அது சரியா?”

ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றிப் போலீஸ்காரருக்குத் தெரியாது

நம்ப முடியாதவன்: ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் அரசமைப்பு உரிமை எனத் தெரியாத இன்ஸ்பெக்டர் பாரிட் சைய்ரியைப் போன்ற பலர் இருக்கின்றனர்.

அவரைப் போன்று பத்தாயிரக்கணக்கில் இருந்தால் அரச மலேசியப் போலீஸ் படை நிலை குறித்து என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அதனைக் கருத்தில் கொண்டால் 19 வயது இளம் பெண்ணுக்குக் கைவிலங்கு மாட்டியது சாதாரணமானது என முதுநிலை போலீஸ் அதிகாரி சொல்லியிருப்பதை நான் குறை கூற முடியாது.

தலையே நாறுகிறது. வாலைப் பற்றிக் கேட்கவா வேண்டும்.

ஸ்டெல்லா லிங்: ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்துக்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது தமக்குத் தெரியாது என பாரிட் கூறிக் கொண்டுள்ளார். ஆகவே அது சரியா ?

வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் விடுவிக்கப்பட்டதற்கு அது தான் காரணமா ? அது சட்டத்திற்கு எதிரானது என அவர்களுக்குத் தெரியாமல் போனதாலா ?

சட்டத்தை அறியாதது காரணமாக இருக்க முடியாது என்பது முட்டாள் போலீசாருக்குத் தெரியாதா ?

கேஎஸ்என்: போலீஸ் அதிகாரி என்றால் சட்டத்தையும் குடி மக்களுடைய உரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என அந்தப் போலீஸ் அதிகாரி தவறாக எண்ணம் கொண்டுள்ளார் போலும்.

தாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், அவற்றை முழுமையாகவும் பாகுபாடு இல்லாமலும் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட வேண்டிய பொறுப்பு போலீஸ்காரர்களைச் சார்ந்துள்ளது.

நாட்டின் சட்டங்களையும் குடிமக்களுடைய உரிமைகளையும் அறியாத அதிகாரிகளுக்கு அவர் ஒர் உதாரணம். இந்த நிலை உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. வெட்கமாகவும் இருக்கிறது. இல்லையா நண்பர்களே !

இந்த நிலைமை நமது போலீஸ்காரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து கவலையை ஏற்படுத்துகின்றது. இந்த விவகாரம் பற்றி ஐஜிபி என்ன சொல்லப் போகிறார் ?

நியாயமானவன்: பெர்சே 3.0 பேரணி மலேசியாவில் மிகப் பெரிய அமைதியான நிகழ்வாக நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நஜிப் அந்த புனிதமான நோக்கத்தைக் கடத்தி மலேசிய வரலாற்றில் போலீஸ் முரட்டுத்தனத்துக்கான பயிற்சிக் களமாக மாற்றி விட்டார்.

நடராஜன் ரெங்கசாமி: அடிப்படைச் சட்டத்தைக் கூட அறியாத அவரை ஏன் தங்கள் அரசமைப்பு உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டார் ?

ஒன்று கூடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்பதை அறியாத அவர்கள் மக்களை அடித்ததில் வியப்பு ஏதுமில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம் பெறுவதற்கு இப்போது என்ன தகுதிகள் வேண்டும் ?

பூ: இதை விட வேறு என்ன வேண்டும் ? அரசமைப்பு என ஒன்று உள்ளது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா அல்லது அதனை வாசித்துள்ளீர்களா ? போலீஸ் பயிற்சியின் போது உங்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்பதைத் தயவு செய்து சொல்வீர்களா ? ஒரு வேளை பிடிஎன் (Biro Tatanegara)?

 

TAGS: