கார் ஏபிகள்: அம்னோவுக்கு சும்மா கிடைக்கும் பணம்

உங்கள் கருத்து: “அதை வைத்துக்கொண்டு தங்கள் அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்…. ஏபிகள் பெரும்பகுதி யாருக்குக் கிடைக்கிறது என்பதுதான் நமக்குத் தெரியுமே. பணம் அச்சடிப்பதைவிட இதில்தான் அதிக இலாபம்.”

முக்ரிஸ் கார் சந்தை பற்றி அறியாது பேசுகிறார் என்கிறது பக்காத்தான்

நியாயவான்: அனைத்துலக வாணிக,தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிருக்கு சார் சந்தை பற்றி  நன்றாகவே தெரியும். மக்களைப் படிக்காதவர்கள், அறிவிலிகள் என்று நினைத்துக்கொண்டு பொய் சொல்லப் பார்க்கிறார்.

ஆனால், இப்போது மலேசியர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள். அவர்கள் பிஎன் அரசியல்வாதிகள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பி விடமாட்டார்கள்.

கோ யு லூங்: முக்ரிஸுக்கா தெரியாது ஏபி செயல்படும் விதம். அதைக் கொண்டுவந்தவரே அவரின் தந்தைதானே.அதை வைத்துக்கொண்டு தங்கள் அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.

ஏபிகள் பூமிபுத்ராக்களின் நன்மைக்காகக் கொடுக்கப்படுகிறது என்றால் வறிய நிலையில் உள்ள மலாய்க்காரர்கள்ய்க்கு அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க ஒன்றிரண்டு ஏபிகள் கொடுக்கலாமே..ஏபி-களில் பெரும்பகுதி யாருக்குக் கிடைக்கிறது என்பதுதான் நமக்குத் தெரியுமே.பணம் அச்சடிப்பதைவிட இதில்தான் அதிக இலாபம்.

ஸவைபெண்டர்:ஏபிகளால் தங்களுக்கு வேண்டியவர்கள் நன்மை அடைவதை முக்ரிஸ் நன்கு அறிவார்.ஆனால், அவை கார் உரிமையாளர்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதை அவர் அறிய மாட்டார்.

தேசிய கார் தயாரிப்பாளரான புரோட்டோனைக் காப்பாற்றவும் ஒரு சில அல்லக்கைகளுக்குப் படியளக்கவும் கார் வாங்கும்போது வானளாவும் வரிகளைக் கட்ட வேண்டியிருக்கிறது.நம் வருமானத்துக்கு ஏற்ப, காருக்கான தவணைப் பணத்தை ஏழு ஆண்டுகளிலிருந்து ஒன்பது ஆண்டுகள்வரை செலுத்துகிறோம். அதன்பின்னர் காருக்குப் பொருளாதார மதிப்பும் இருக்காது; ஒழுங்காக செயல்படவும் மாட்டாது.

சாலைகளில் நிறைய பழைய கார்களைப் பார்க்கிறோம். ஏனென்றால், புதிய கார்களுக்கான உயர்ந்த விலை மலேசியர்களுக்குப் பெரும் சுமையாக உள்ளது.ஆனால்,அதுதான் ஏபிகளை வைத்திருக்கும் அல்லக்கைகளுக்குப் பெரும் இலாபத்தைத் தருகிறது.

இவ்வேளையில் பிகேஆரின் ரபிஸி ரம்லியின் பரிந்துரை அருட்கொடையாக வந்துள்ளது.காரின் விலையும் குறைவாக இருக்கும், தரமும் நன்றாக இருக்கும், நீண்டகாலப் போக்கில் அரசாங்கத்துக்கும் அதிக வருமானமும் கிடைக்கும்.

கேஎஸ்சி: இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.உண்மையில் காரை விற்பவருக்குக் கிடைக்கும் ஆதாயம் குறைவுதான்.ஆனால்,ஏபி வைத்திருப்பவர்தான் இடைத்தரகர்போல் செயல்பட்டு பெரும்பகுதி ஆதாயத்தை அடைகிறார்.

எனவே, ஏபிகளை ஏலம் விடுவதால் இடைத்தரகர் இருக்க மாட்டார்.விற்பனையாளருக்குக் கூடுதல் ஆதாயம் கிடைக்கும், விற்பனையும் கூடும்.

கேஜென்: நம் கார்களின் விலையே அசிங்கமாக உள்ளது. உள்ளூரில் இணைக்கப்படும் 1,800 சி.சிக்கும் குறைந்த திறன்கொண்ட கார்களின் விலை ரிம100,000 என்றால் அதில் ரிம48,000அரசாங்க வரி என்பதை வரி அட்டவணை காண்பிக்கிறது.

பொதுப்போக்குவரத்து மட்டமாகவுள்ள ஒரு நாட்டில் இந்த விலையை நியாயப்படுத்த முடியாது.உள்ளூர் கார்தொழிலைப் பாதுகாக்கவும் சில அல்லக்கைகளுக்குப் படியளக்கவும் நடுத்தர வகுப்பினர் பெரும் சுமையைத் தாங்க வேண்டியிருக்கிறது.

ஹெட்: உலகில் இரண்டு வகை மக்கள் உண்டு. ஒரு வகையினர் அறிவார்ந்தமுறையில் பேசுவார்கள்.மற்றொரு வகையின்ர் முக்ரிஸ்போல் பேசுவர்.

TAGS: