‘டிஏபி தலைமையகத்தில் வீசப்பட்ட சிவப்புச் சாயத்தை அப்படியே வைத்திருங்கள். அது கௌரவச் சின்னமாக இருக்கட்டும்’

“இதுவும் பக்காத்தான் செராமக்கள் மீதும் பிகேஆர் பஸ் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கின்றனவா?”

பினாங்கு டிஏபி தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது

பீட்டர் கிளிமெண்ட் கோ: பிரதமர் படத்தின் மீது பிட்டத்தைக் காட்டுவதும் மிதிப்பதும் குற்றமாகும். ஆனால் பிஎன் சாராத அரசியல் கட்சிகளுடைய சொத்துக்கள், பிஎன் அல்லாத அரசியல்வாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குற்றம் அல்ல.

இதில் மிகவும் வேடிக்கையானது என்னவென்றால் “அந்தச் சம்பவத்தை முழுமையாக விசாரிப்பதாக” போலீஸ் தலைவர் இப்போது சூளுரைத்துள்ளதாகும். இப்போது ஏன் சூளுரைக்க வேண்டும் ?

அது விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்- பிரதமர் படத்தின் மீது பிட்டத்தைக் காட்டியவர்களும் மிதித்தவர்களும் பிடிக்கப்பட்டது போல.

டூட்: பினாங்கு டிஏபி மிகவும் அற்புதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக நான் எண்ணுகிறேன். அதனால் சிலருக்கு அச்சம் சூழ்ந்துள்ளது. விரக்தி அடைந்துள்ளனர். அடாவடித்தனத்தில் இறங்குவதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கேகே சியோங்: இதனைச் செய்வதற்குக் காரணமே இல்லை. இதனால் என்ன நடக்கப் போகிறது. அந்தக் காரியத்தைச் செய்தவர்கள் தங்களையே முட்டாளாக்கிக் கொள்கின்றனர்.

பென்கோர்: டிஏபி-க்கும் மற்ற பக்காத்தான் ராக்யாட் கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள், டிஏபி தலைமையகத்தில் வீசப்பட்ட சிவப்புச் சாயத்தை அப்படியே வைத்திருங்கள். அது கௌரவச் சின்னமாக இருக்கட்டும். அதுவே விவேகமான காரியமாகவும் இருக்கும்.

சதிகாரர்களை அரச மலேசியப் போலீஸ் படை பிடித்த பின்னரே அந்த சாயத்தை அழியுங்கள்.

எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதல்கள் பற்றி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

சமா சமா: அரசியல் களத்தில் இரு பக்கத்தையும் சார்ந்த அமைதியை விரும்பும் மக்கள் இத்தகைய கிறுக்குத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்தத் தாக்குதல்களை பிஎன் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்வர் என நான் எண்ணவில்லை.

பிஎன் தலைவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் (அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பது நமக்குத் தெரியும்) அந்தத் தாக்குதல்களை பகிரங்கமாகக் கண்டித்து சிலரைக் கைது செய்ய அரச மலேசியப் போலீஸ் படை கைது செய்ய விட்டு விட வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் வாக்காளர்களிடமிருந்து சில மதிப்பெண்களைப் பெறலாம்.

நான் இதனை அவர்களிடம் சொல்லக் கூடாது. அந்த பிஎன் அனுதாபிகள் உண்மையில் தோல்வி கண்டவர்கள். 13வது பொதுத் தேர்தலில் தோல்வி காணும் முன்னரே அவர்கள் அத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

முஷிரோ: இது தேர்தல் காலம். இந்த முறை அம்னோ உயிர் வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழ்நிலைகள் அதற்கு பழக்கமில்லை. பிரச்னைகளை விவாதிக்கும் போது அது தோல்வியை எதிர்நோக்குகின்றது. அதனால் தனக்கு நன்கு தெரிந்த அடாவடித்தனத்தில் அது இறங்கியுள்ளது.

மக்களும் பக்காத்தானும் அதன் அடாவடித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எதிர்க்கட்சிகள் தவறு செய்வதற்காக அது காத்திருக்கிறது. ஒரு சிறிய காரணம் கிடைத்தால் கூடப் போதும் பக்காத்தானை போலீஸ் பாய்ந்து விடும்.

பெர்ட் தான்: டிஏபி-க்கு எதிராக எந்த அளவுக்கு வன்முறைகள் தொடருகின்றதோ அந்த அளவுக்கு பினாங்கில் மசீச-வும் கெரக்கானும் பாதிக்கப்படும். அவை அந்த வன்முறைகளைக் கண்டிக்கா விட்டால் அவற்றுக்கு எதிராக ஆத்திரம் திரும்புவது நிச்சயம்.

மேப்பிள்சிராப்: இதுவும் பக்காத்தான் செராமக்கள் மீதும் பிகேஆர் பஸ் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கின்றனவா ?

பிஎன் ஊழலாக இல்லாவிட்டாலும் “உடல்கள் நசுக்கப்பட்டாலும் புத்ராஜெயாவைத் தற்காக்க வேண்டும்”, “சாலைத் தடுப்புக்களைப் போட வேண்டும்” என்ற அவர்களது நிலையை நாம் நிராகரிக்க வேண்டும்.ஏனெனில் அவர்களுடைய போக்கு இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கே வழி வகுக்கும்.

TAGS: