உங்கள் கருத்து: “சுவாராமுக்கும் பண உதவி செய்வது யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பெர்காசா, பிஎன் அரசியல்வாதிகள் பலருடைய டாம்பீகமான வாழ்க்கைமுறைக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதில் கொஞ்சம்கூட அக்கறை காட்டுவதில்லை”.
பெர்காசா: சுவாராமுக்கு நிதியுதவி செய்வோரே எல்ஜிபிடி திட்டங்களுக்கும் ஆதரவாக செயல்படுகின்றனர்
வழிப்போக்கன்: சுவாராமின் செயல் பாராட்டத்தக்கது, பயனானது என்பதை பெர்காசா தகவல் தலைவர் ரஸ்லான் காசிமுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.மாற்றரசுக் கட்சித் தலைவர் ஒருவர்மீது வழக்குத் தொடுக்க அம்னோ-பிஎன் நிர்வாகம் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுவதைக் காட்டிலும் சுவாராமின் செயல் மேலானதல்லவா?
ஜியுடைஸ்: சுவாராமுக்கும் பண உதவி செய்வது யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பெர்காசா, பிஎன் அரசியல்வாதிகள் பலருடைய டாம்பீகமான வாழ்க்கைமுறைக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதில் கொஞ்சம்கூட அக்கறை காட்டுவதில்லை.அது சரி… பெர்காசாவுக்கு எங்கிருந்து பண உதவி கிடைக்கிறது?
பூட்சி: ஊழல், மோசடி,செக்ஸ்,கொலை என்று நாட்டில் எத்தனையோ கொடுமைகள்.அவை பற்றிப் பேச பெர்காசாவுக்கு விருப்பமில்லை, ஒரு கெளரவமான அமைப்பான சுவாராம் மீது மட்டும் குறைகாண வந்துவிட்டது.
தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் பொய்யான சத்திய பிரமாணம் செய்தாரே அதற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டியதுதானே?அதைச் செய்யமாட்டார்கள்.அதைச் செய்தால் அல்டான்துன்யா கொலை பற்றிய உண்மை வெளி வந்துவிடும் என்ற பயம்.
ரஸ்லான், மலாய்க்காரர்கள் நீங்கள் நினைப்பதுபோல் அறிவிலிகள் அல்லர்.
எச்பி லூய்: சுவாராம், பிரான்சில் ஸ்கோர்பியன் ஊழல் பற்றிய விசாரணை தொடங்குவதற்குக் காரணமாக இருந்தது என்பதால் அதை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள்.
பத்திமா: அப்படியே, அல்டான்துன்யாவை கொடிய முறையில் கொலைசெய்ய கொலைகாரர்களுக்குப் பணம் கொடுத்தவர் யார் என்பதையும் கண்டறிவது நல்லது.நிச்சயமாக சோரோஸ் அல்ல. அவர் அந்த மங்கோலியப் பெண்ணைக் கொல்ல எந்தக் காரணமும் இல்லை.
பெயரிலி 4458: சுவாராமுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்று வாய்கிழிய சத்தம் போட்டுக் கேட்கிறதே பெர்காசா, அந்தப் பெர்காசாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?கொலை செய்தல் இஸ்லாத்துக்கு எதிரானது.அப்படி இருக்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணைக் கொன்றார்களே அது பற்றி ஏன் அவர்கள் கேட்கவில்ல?.
நீதிமன்றம் ஏனோ அவர்களின் செயலின் நோக்கத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.பெர்காசாவாவது அதில் அக்கறை கொண்டிருக்கலாமே.
அல்லது, அதற்குப் பின்னால் ஏதோ முக்கியமான காரணம் இருக்கிறதோ?
கொகோமோமோ: பெர்காசா எல்ஜிபிடி(பெண்ணுறவை நாடும் பெண்,ஓரினச் சேர்க்கையாளர்,இருபால் உறவை விரும்புவோர், அரவாணிகள்) விவகாரம்தான் உங்களுக்குக் கிடைத்ததா? இதற்குப் பதில் ஊழல்கள், கொள்ளையடித்தல், அநீதிகள் போன்றவற்றால் நாட்டுக்குப் பெருங் கெடுதல் செய்துகொண்டிருக்கிறார்களே அவர்களின் பக்கம் கொஞ்சம் அக்கறை காண்பிக்கலாமே.