துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூடிமறைத்தல் இல்லை: நெகிரி போலீஸ்

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசார் உண்மையை மூடிமறைப்பதாகக் கூறப்படுவதை நெகிரி செம்பிலான் போலீசார் மறுத்துள்ளனர்.

“மூடிமறைத்தலா?அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு”, என்று நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் ஒஸ்மான் சாலே கூறினார்.

ஒஸ்மான், அச்சம்பவம் மீது விசாரணை நடப்பதாகக் கூறினாரே தவிர மேல்விவரம் எதையும் தர மறுத்தார்.

முன்னதாக ராசா எம்பி அந்தனி லோக்(இடம்), ஆட்சிக்குழு உறுப்பினரின் வீட்டில்  துப்பாக்கிச் சூடு நடந்தது பற்றி“நம்பத்தக்க வட்டார”மொன்று தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.அத்துடன் யும் அதை மூடிமறைக்க முயற்சிகள் நடப்பதையும் அவ்வட்டாரம் தெரிவித்தது.

“அந்த முதல்-தவணை சட்டமன்ற உறுப்பினர்(பெயர் வெளியிடப்படவில்லை) ஒரு முறை சுட்டிருக்கிறார்.அது பற்றிப் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது ஆனால், பின்னர் மீட்டுக்கொள்ளப்பட்டது”.
ஆனால், அவரும் மூடிமறைக்கும் முயற்சி பற்றி அதிகம் விவரிக்கவில்லை.

அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது உண்மையா என்பதைப் போலீசார் உறுதிப்படுத்த வேண்டும், முழு விசாரணையும் நடத்த வேண்டும் என்று டிஏபி இளைஞர் தலைவருமான லோக் கேட்டுக்க்ண்டார்.

“அன்வாரின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியை எடுத்துக் காண்பிக்கத்தான் செய்தார் உடனே, போலீசார் விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

“இப்போது போலீசார், இரட்டை வேடம் போட மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கு என்றாலும்…..ஆட்சிக்குழு உறுப்பினர் எதற்காக சுட்டார், அது நியாயமான செயலா என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும்”, என்று லோக் கூறினார்.

 

TAGS: