நம்பிக்கை குறையும் போது ஒரே மலேசியா பிரதமர் இனவாத அட்டையை நாடுகிறார்

“நஜிப் ரசாக் இன, சமய வேறுபாடின்றி நீங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் தானே ? மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது பற்றி ஏன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றீர்கள். அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனரா ?”

13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பதை நிர்ணயிக்கும் என்கிறார் நஜிப்

அடையாளம் இல்லாதவன்_3e86: அவர் மீண்டும் இனவாத அரசியலுக்குத் திரும்பி விட்டார். ஆனால் பிரதமர் நஜிப் ரசாக் அக்கறை கொண்டுள்ளது- அம்னோ/பிஎன் நிலைத்திருப்பது பற்றியதாகும்.

இந்த நாட்டில் மலாய் இனம் தொடர்ந்து நிலைத்திருக்கும். இந்த நாட்டில் மலாய்க்காரர்களைக் காட்டிலும் சீனர்கள் அதிகமாக இருந்தால் அவர் பெரும்பாலும் ‘சீனர்கள் நிலைத்திருக்க” என்று பேசக் கூடும்.

பிஎன் அதிகாரத்தில் இருக்கும் வரை அவர் எந்த ஒரு இனத்தின் உயிர் வாழ்வு பற்றிக் கவலைப்படப் போவதில்லை.

சேரிப் பையன்: நஜிப் ரசாக், இன, சமய வேறுபாடின்றி நீங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் தானே ? மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது பற்றி ஏன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றீர்கள். அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனரா ?

பிஎன் முதுகெலும்பு என்ற முறையில் அம்னோ மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்ந்து போராடும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆகவே ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு என்ன நேர்ந்தது ?

ஆம். நீங்கள் பெக்கான் அம்னோ தொகுதிப் பேராளர் கூட்டத்தில் பேசுவதை நான் மறந்து போய் விட்டேன்.

லெலிஸ்டாய்!: மலாய்க்காரர்களுடைய எதிர்காலத்தை மேம்படுத்த அம்னோ என்ன செய்தது ? அம்னோ புதிய பொருளாதாரக் கொள்கையை விரும்பியது. நாம் அதனைக் கொடுத்தோம்.

ஆதரவுக் கொள்கைகள் 41 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டும் மலாய்க்காரர்கள் இன்னும் பின் தங்கியுள்ளனர். ஆனால் மலாய்க்காரர் அல்லாதார் புதிய பொருளாதாரக் கொள்கை, தடைகளை அதிகரித்ததால் கடுமையாக உழைத்து பல துறைகளில் முன்னேறி விட்டனர்.

புதிய பொருளாதாரக் கொள்கையை அம்னோ தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனது சேவகர்களையே வளப்படுத்தியது. மலாய்க்காரர்கள் இன்று வரை தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். அம்னோ அதில் தோல்வி கண்டுள்ள போது மலாய்க்காரர்களுடைய எதிர்காலத்துக்கு அது எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும் ?

மலாய்க்காரர்களுக்கு புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற ஆதரவு நடவடிக்கைகள் தேவை இல்லை. சக மலேசியர்களைப் போன்று அவர்களும் மற்றவர்களுடன் சமமாக நின்று போட்டியிடும் ஆற்றலைப் பெற்றுள்ளனர்.

மலாய்க்காரர்களுக்குத் தேவைப்படுவது பயிற்சியும் தார்மீக ஆதரவுமே. வெற்றி பெற வேண்டுமானால் ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழியோ, திடீர் வழியோ ஏதும் கிடையாது.

கிங்பிஷர்: 50 ஆண்டுகளுக்கு மேல் ஏகபோக அதிகாரத்தை வைத்திருந்த பின்னர் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்படும் எந்த நிர்வாகமும் மலாய்க்காரர்களுடைய நிலையைக் கீழறுப்புச் செய்யும் எனச் சொல்வது அபத்தமானது.

விரக்தி அடைந்த நிலையில் அரசியல் முன்னேற்றத்துக்கு உதவுமாறு ஒருவர் இறைவனை அழைக்கலாம். ஆனால் நம்பிக்கை இழக்கும் போது இறைவன் பெயரைச் சொல்ல வேண்டாம்.

சின்ன அரக்கன்: நஜிப் 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பதை நிச்சயம் உறுதி செய்யும். மலாய்க்காரர்கள் ஏன் தொடர்ந்து பிஎன்/அம்னோவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் ?

இன்று மலாய்க்காரர்கள் அரசியல் ரீதியில் முதிர்ச்சி அடைந்துள்ளனர். நல்ல அறிவாற்றலையும் பெற்றுள்ளனர். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் போக்கின் மூலம் கடந்த 50 ஆண்டுகளாக அம்னோ தங்களைச் சுரண்டி வந்துள்ளதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

நியாயமானவன்: அம்னோ 55 ஆண்டுகளாக ஆட்சி புரிகிறது. மலாய்க்காரர்கள் இன்னும் ஏழையாகவும் பின் தங்கியும் உள்ளனர்.  ஆகவே நஜிப் எதைப் பற்றிப் பேசுகிறார் ?

இப்போது கொழுத்த பணக்காரர்களாக இருப்பது அம்னோ மலாய்க்காரர்கள் மட்டுமே. தொடர்ந்து அதிகாரத்தில் அவர்கள் தொடர்ந்து இருக்க விரும்புவதற்கு அது தான் ஒரே காரணம். அப்போது தான் நாட்டின் செல்வத்தை மேலும் மேலும் திருடலாம்.

நஜிப் அவர்களே, உங்கள் காலம் முடிந்து விட்டது. இனவாத அரசியல் விளையாட்டு வேண்டாம். மலாய்க்காரர்கள் இனிமேலும் முட்டாள்கள் அல்ல.

இம்ராஸ் இக்பால்: 13வது பொதுத் தேர்தல் சாதாரணமானது அல்ல. நஜிப், அவரது அமைச்சர்கள், அவர்கள் குடும்பங்களின் உயிர்வாழ்வு ஆகியவற்றை நிர்ணயிக்கப் போகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் எதிர்காலத் தலைமுறையினருடைய உயிர்வாழ்வை நிர்ணயிக்கப் போகிறது.

நியாயம்: அம்னோ மலாய்க்காரர்களின் உயிர்வாழ்வு பற்றி பிரதமர் பேசுவதாக நான் நினைக்கிறேன். 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் சாதாரண மலாய்க்காரர்கள், மக்கள் ஆகியோருடைய வாழ்க்கை தொடரும்.

 

TAGS: