‘நஜிப் கால கட்டத்தில் ஜமீன்தார்கள் (warlords) இல்லை’

அம்னோவில் இப்போது ஜமீன்தார்கள் (warlords) இல்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார்.

அந்த ஜமீன்தார்கள் கடந்த கால அம்னோ வரலாற்றில் ஒரு பகுதியாகவே மட்டும் கருதப்படுகின்றனர் என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு நஜிப் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் விவேகமுடன் நடந்து கொண்டுள்ளது முக்கியக் காரணம் என அவர் சொன்னார். உள்ளூர் தலைவர்களுடைய கருத்துக்களையும் உணர்வுகளையும் நஜிப் ஒதுக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம் என்றார் அவர்.

“ஜமீன்தார்கள் குண்டர் பண்பாட்டை பின்பற்றினார்கள். அதனால் நம்மை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். நம்மை ஆதரிக்கவும் மறுத்தனர்.”

“ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. ஜமீன்தார்கள் என யாரும் இல்லை. எந்தத் தொகுதித் தலைவரும் அப்படி இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி ஒருங்கிணைந்து வேலை செய்கின்றனர்.”

“தாங்கள் அம்னோ தலைவர்கள் மட்டுமல்ல மக்களுடைய தலைவர்கள் என்பதையும் அவர்கள் இப்போது அறிந்துள்ளனர்,” என ஹம்சா நேற்று கோம்பாக் அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாக உத்துசான் செய்தி மேலும் குறிப்பிட்டது.

 

TAGS: