இன்று அதிகாலை, பினாங்கு பூலாவ் திக்குஸ் கெராக்கான் சேவை மையத்தின் முன்கதவின்மீது முட்டைகள் வீசி எறியப்பட்டதுடன் காப்பியும் விசிறியடிக்கப்பட்டிருந்தது.
அச்சம்பவம் பற்றிக் கருத்துரைத்த பினாங்கு கெராக்கான் தலைவர் டாக்டர் டெங் ஹொக் நான்,அது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.அதனால் மக்கள் ஆத்திரமடையலாம் என்றார்.
ஆனால் அது பற்றி போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
அதைச் சிறு விவகாரம் என்று குறிப்பிட்ட டெங், அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“அரசியல் வன்முறையை அனைவருமே கண்டிக்க வேண்டும்.அது மலேசியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவில்லை.அப்படிப்பட்ட செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்”.
அண்மைக்காலமாக அப்படிப்பட்ட செயல்கள் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்த டெங் பாரிசான் நேசனல், மாற்றரசுக் கட்சி என இரு தரப்புமே அதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.