மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம் என்றாலும், எதுவரினும் எதிர்கொள்ள அது தயாராகவுள்ளது.
“மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்….(உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார) அமைச்சர் (இஸ்மாயில் சப்ரி யாக்கூப்)எங்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படலாம் எனக் கூறியுள்ளார்”, என்று சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் தெரிவித்தார்.
“சுவாராம் ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும் அவர் கோடி காட்டியிருக்கிறார், (எனவே) எதற்கும் தயாராகவே இருக்கிறோம்.”
என்றாலும் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற திட்டத்தை அது விவரிக்கவில்லை.நேரம் வரும்போது அதைத் தெரிவிப்பதாக அந்த என்ஜிஓ கூறிவிட்டது.