கோலாலம்பூர் கெராக்கான் தொகுதி விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2012 பல்சிகிச்சை சட்ட முன்வரைவில் பல்மருத்துவர்கள் அவர்கள் தகுதிபெறாத சிகிச்சைகள் செய்வதற்குச் சிறைத்தண்டனை என்றிருப்பதை மாற்றுவது உள்பட சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என நினைக்கிறது.
சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்குமுன், தங்கள் பரிந்துரைகளைச் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாயிடம் தெரிவிக்கப்போவதாக கேஎல் கெராக்கான் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறியது.
“நாடாளுமன்ற உறுப்பினர்களில் பல் மருத்துவர் ஒருவர்கூட இல்லை, எனவே மாற்றப்பட வேண்டிய பகுதிகளை நாங்களே பட்டியல் காட்டுக் காட்டுவோம்”, என்று அத்தொகுதி செயலாளர் வொங் ருவென் யுவான் கூறினார்.அவர் ஒரு பல்மருத்துவருமாவார்.
1971ஆம் ஆண்டு பல்மருத்துவச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் அச்சட்ட முன்வரைவு அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.