ஐபிபி எனப்படும் சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களில் பங்குகளை கொள்முதல் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த ஆண்டு ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் (1MDB) வழியாக ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான Tanjung Energy Holdings Sdn Bhd-லும் கெந்திங் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான Mastika Lagenda Sdn Bhd-லும் அரசாங்கம் பங்குகளை வாங்கியது.
மார்ச் மாதம் தஞ்சோங் பேரத்துக்கு 8.5 பில்லியன் ரிங்கிட்டும் கடந்த மாதம் Mastika Lagenda-வில் Genting Sangyen -க்கு இருந்த 75 விழுக்காடு பங்குகளுக்கு 2.55 பில்லியன் ரிங்கிட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாக பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் கூறினார்.
“அந்த பேரங்கள் காரணமாக ஆனந்தாவும் கெந்திங்கும் 1.9 பில்லியன் ரிங்கிட் ஆதாயத்தை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் மிகவும் பழையவை. பங்குகளைக் கொள்முதல் செய்வதற்குப் பெரும்பணத்தை செலவு செய்வதற்குப் பதில் சொந்தமாக அரசாங்கம் புதிய மின் உற்பத்தி நிலையங்களைக் கட்டுவது ஆதாயகரமாக இருந்திருக்கும். ஆகவே ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் வழியாக நடத்தப்பட்டுள்ள அந்த கொள்முதல்கள், மக்களுக்கு பயனுள்ளதா அல்லது சில சேவகர்களுக்கு நன்மையளித்துள்ளதா என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.”
“அத்துடன் ஐபிபி-க்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் தலைமுறை சலுகைகள் 2016லும் 2017லும் முடிவுக்கு வருவதாக எரிசக்தி ஆணையம் அறிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கான எந்தப் புதிய பேரங்களும் போட்டி அடிப்படையில் இருக்கும் என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.ஆகவே அந்த கொள்முதல் கேள்விக்குரியது. அறிவுக்கு ஒப்பவுக் இல்லை. காரணம் பெட்ரோனாஸுடன் கெந்திங் செய்து கொண்ட எரிவாயு கொள்முதல் ஒப்பந்தம் நிறைவுக்கு வர இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ளன. இது ஆணைய அறிக்கைக்கு முரணானதாகும்,” என்றும் நிக் நஸ்மி சொன்னார்.
ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் (1MDB) முழுமையாக அரசாங்கத்துச் சொந்தமானது ஆகும்.