உங்கள் கருத்து: ஊழலுக்கு மகாதீர் தரும் விளக்கம்

இந்த மனிதருடைய கபட நாடகத்துக்கு ஒர் எல்லையே இல்லையா ? ரொக்க அன்பளிப்புக்கள்  ‘கிட்டத்தட்ட’ வாக்குகளை வாங்குவதற்கு சமம் என இறைவன் இப்போதுதான் அவருக்கு தெரிவித்துள்ளான்.”

டாக்டர் மகாதீர்: ரொக்க அன்பளிப்புக்கள்  ‘கிட்டத்தட்ட’ வாக்குகளை வாங்குவதற்கு சமம்

சின்ன அரக்கன்: ரொக்க அன்பளிப்புக்கள் வாக்குகளை வாங்குவது இல்லையா ? அது அப்பட்டமாக வாக்குகளை வாங்கும் நடவடிக்கையாகும். அது ஊழல்.

“அளவுக்கு அதிகமான ஜனநாயகம் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்” என்றும் அந்த முன்னாள் பிரதமர் சொல்லியிருக்கிறார். அது மிகவும் அபத்தமானது. ஜனநாயகம், பொருளாதாரம் குறித்த அவருடைய குறுகிய புத்தியையே அது காட்டுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஜனநாயகம் முக்கியப் பங்காற்றுகின்றது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதார வளர்ச்சியை நிர்ணயம் செய்வது ஜனநாயகம் குறைவாக அல்லது அதிகமாக இருப்பதோ அல்லது சர்வாதிகார அரசாங்கத்தைப் பெற்றிருப்பதோ அல்ல. ஊழலும் ஊழல் அரசியல்வாதிகளுமே நாட்டின் பொருளாதாரம் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

அந்த அரசியல்வாதிகள் தங்கள் நாடுகளிலிருந்து சூறையாடிய செல்வமே பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய தடைக்கல் ஆகும்.

ஜனநாயகத்தை சீர்குலைத்து விட்ட பொருளாதார ரீதியில் வலுவான ஆட்சி பெருங்கடலோரத்தில் கட்டப்பட்ட மணல் கோட்டையே தவிர வேறு ஒன்றும் இல்லை. அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கால ஒட்டத்தின் சோதனைக்கும் இயற்கையின் சீற்றத்திற்கும் அது தாங்காது.

ஸ்டார்ர்: “அது வாக்குகளை வாங்குவதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட அது போன்றது தான்” என்கிறார் மகாதீர்.

இது தார்மீக ஊழல். வாக்குகளை வாங்குவதை விட 10 மடங்கு மோசமானது. என்ன பெயர் கொடுத்தாலும் ஊழல் ஊழல்தான். வாக்குகளை வாங்குவது வாக்குகளை வாங்குவதுதான். அதனை அந்த வகையில் மகாதீர் நியாயப்படுத்துவது அங்கீகரிப்பதாகும். அதுதான் பிரச்னையே.

கொள்கைப் பிடிப்பு இல்லாத நாட்டுத் தலைமைத்துவம் மலேசிய சமுதாயத்தின் நன்னெறி வடிவத்தையே அலங்கோலப்படுத்தி விட்டது. நமது சமுதாயத்தில் ஒவ்வொரு அங்கமும் கடந்த பல தசாப்தங்களாக சீரழிந்து வருவதில் வியப்பில்லை.

விஜய்47: இந்த மனிதருடைய கபட நாடகத்துக்கு ஒர் எல்லையே இல்லையா ? ரொக்க அன்பளிப்புக்கள்  ‘கிட்டத்தட்ட’ வாக்குகளை வாங்குவதற்கு சமம் என இறைவன் இப்போதுதான் அவருக்கு தெரிவித்துள்ளான்.

கடந்த 50 ஆண்டுகளாக குறிப்பாக தமது 22 ஆண்டு கால ஆட்சியில் அதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது என்பதை அவர் மறந்து விட்டாரோ ?

அவ்வாறு செய்யும் போது அவர் சலுகை பெற்ற சேவகர்கள் வர்க்கத்தை உருவாக்கினார். ஆற்றலும் கௌரவமும் பெருமையும் இல்லாத அளவுக்கு சமூகத்தை தாழ்த்தி விட்டார்.

ஒஸ்கார் கிலோ: ரொக்க அன்பளிப்பு= வாக்குகளை வாங்குவதாகும்.  யாரும் அதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அதுவும் என் வரிப் பணம் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

பிஎன் பெரிய அளவில் வெற்றி பெறும் என டாக்டர் மகாதீர் எதிர்பார்க்கவில்லை

அப்லாஸ்டின்: மகாதீர் அவர்களே, எந்த அடிப்படையில் அம்னோ வெற்றி பெறும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ? 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் காட்டுவதற்கு நல்ல விஷயம் ஏதுமில்லை.

நாட்டின் வளப்பத்தை அனுபவிக்கும் ஒரே அமைப்பாக தன்னை மாற்றிக் கொண்ட அம்னோவின்  துரோகத்தை பல வாக்காளர்கள் நன்கு அறிந்துள்ளனர். நம்மிடையே காணப்படும் ஊழல், திறமையின்மை, இனவாதம் ஆகியவற்றுக்கு அம்னோ மட்டுமே காரணம்.

பெர்ட்  தான்: மகாதீர் அவர்களே, கூட்டரசு அரசாங்கம் ஏன் பலவீனமாக இருக்கிறது ? நீங்கள் அப்துல்லா அகமட் படாவி அரசாங்கத்தை வெளிப்படையாக வெறுத்து அவரைப் பிரதமர் பொறுப்பிலிருந்து வீழ்த்த விரும்பியதால் கடந்த பொதுத் தேர்தலில் நீங்கள் மறைமுகமாக பிஎன்-னை கீழறுப்புச் செய்தீர்கள்.

ஆனால் அந்தச் சமயத்தில் நீங்கள் அதனை உணரவில்லை. அம்னோ ஆதரவாளர்களிடயே உங்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்தால்- கட்சிக்கு எதிரான உங்கள் வேலைகள் காரணமாக பிஎன் நான்கு மாநிலங்களை இழந்தது. பாஸ் கிளந்தானை தக்க வைத்துக் கொண்டது.

நீங்கள் அந்தத் தேர்தலுக்கு முன்பு வலுவான எதிர்த்தரப்பு நாட்டுக்குத் தேவை என நீங்கள் சொன்னீர்கள்.  அதுதான் உங்கள் விருப்பமா ? அல்லது நல்லதாக இல்லாத தேர்தல் முடிவுகள் மூலம் அப்துல்லாவை பலவீனப்படுத்தி அவரை விரட்ட நீங்கள் விரும்பினீர்களா ?

இப்போது உங்கள் கடந்த கால நடவடிக்கைகள் உங்களையே காயப்படுத்துகின்றன. வலுவான எதிர்த்தரப்பு தேவை என்ற உங்கள் கூற்றே உங்களுக்கு எதிராக வேலை செய்கின்றது. உங்கள் சீட்டாட்டம் கடந்த காலத்தில் பிஎன் இடங்களை இழக்க வகை செய்தது. இப்போது முழு அரசாங்கத்தையும் அது இழக்கப் போகிறது.

மாற்றம்: அவருடைய சொற்களைப் படித்தால் ஒரு விஷயம் புரிய வரும். அதாவது நடப்புப் பிரதமருடைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் கீழறுக்கும் பழைய தந்திரங்களை பழைய எஜமானர் தொடங்கி விட்டார்.

மகாதீர் என்ன நோக்கத்துடன் இயங்கினாலும் அடுத்த பொதுத் தேர்தலில் அதிசயம் ஏதும் நிகழ்ந்தால் மட்டுமே பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியும். பிரதமர் நஜிப் ரசாக்கின் நிலை தொடர்ந்து நலிவாகவே இருக்கும்.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்: பிஎன் சிறிய பெரும்பான்மையுடன் மட்டுமே வெற்றி பெறும் என முன்னாள் பிரதமர் ஒருவர் கருதினால் நிலைமை உண்மையில் படு மோசமாக இருக்க வேண்டும். எனவே பிரதமர் பொதுத் தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டே போவதில் எந்த அதிசயமும் இல்லை.

 

TAGS: