சபா பிஎன், பக்காத்தான் நிழல் அமைச்சரவையைக் காண விரும்புகிறது

பக்காத்தான் ராக்யாட் மற்ற இதர எதிர்க்கட்சிகளும் தங்கள் ‘நிழல் அமைச்சரவையை’ வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சபா பாரிசான் நேசனல் வழங்கியுள்ளது.

அவ்வாறு சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சரவையை சபா மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்றும் அதன் மூலம் தாங்கள் எந்தக் கட்சியைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய இயலும் என்றும் அவர் சொன்னார்.

“எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் அமைச்சர் பதவிகளுக்கு பெரிய அளவில் போட்டி இருக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகும். ஆகவே அனைவருடைய நன்மைக்காக எதிர்த்தரப்பு தன்னுடைய ‘நிழல் அமைச்சரவையை’ அறிவிக்க வேண்டும் என சபா பிஎன் விரும்புகிறது.

“அமைச்சர் பதவிகளுக்கான வேட்பாளர்களை சபா மக்கள் அணுக விரும்புவர்,” என அவர் சொன்னார்.

கோத்தாகினாபாலுவில் அம்னோ கட்டிடத்தில் சபா பிஎன் உறுப்புக் கட்சிகளின் பேராளர்களும் தலைமைச் செயலாளர்களும் கலந்து கொண்ட கூட்டு நிருபர்கள் சந்திப்பில் அப்துல் ரஹ்மான் பேசினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்பு வெற்றி பெற்றால் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் சபா முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதை அறியவும் சபா பிஎன் விரும்புகிறது என்றும் அவர் சொன்னார்.

ஏனெனில் பியூபோர்ட், துவாரான், கோத்தா கினாபாலு, சண்டக்கான் ஆகியவை அந்தப் பதவிக்கு தங்கள் சொந்த வேட்பாளர்களை எண்ணத்தில் வைத்துள்ளன என்றார் அவர்

பெர்னாமா

TAGS: