தயிப்பின் சொத்துவளம் அம்பலம்: ஆனால், எம்ஏசிசி நடவடிக்கை எடுக்குமா?

உங்கள் கருத்து:ரிம 500,000 கணக்கில் குழப்பமாம். சுவாராமைப் போட்டுக் குடைகிறார்கள். பிஎன், பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகிறது. ஒன்றும் செய்வதில்லை. என்ன அநியாயம்.”

தயிப்பின் யுஎஸ்21பில்லியன் சொத்துவளம் அம்பலம்

டெலி:புருனோ மன்செர் நிதி அறிக்கை((பிஎம்எப்)யில் சொல்லப்பட்டிருப்பதில் 10விழுக்காடுதான் உண்மை என்றாலும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப்பின் சொத்துவளம் இயுஎஸ்2 பில்லியன் (ரிம6பில்லியன்)ஆகும். அவருடைய வருமானத்தைப் பார்க்கையில் இதுவே அதிகம்தான்.

அவரது சொத்துவளத்தின் மதிப்பு மலைப்பை உண்டாக்குகிறது.சரவாக்கின் சாமான்ய மக்கள் இதை அறிய வந்தால் என்ன நினைப்பார்களோ?

கிழக்கு மலேசிய மக்கள் தங்கள் மாநிலங்களில் அரசியல்வாதிகளின் அத்துமீறல்களுக்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கிறது என்று ஆத்திரமடைவது ஏன் என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.

தலைவெட்டி:  வெட்கக்கேடான விசயம். தயிப் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரராம்.சொத்து மொத்தமும் சரவாக்கைக் கொள்ளையிட்டுச் சேர்க்கப்பட்டது.இதுவும்கூட பனிப்பாறையின் நுனிப்பகுதி போன்றதுதான் என்று பிஎம்எப் கூறுவதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

காடு வா வா என்று அழைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு எவ்வளவு சொத்துத்தான் தேவை?இம்மனிதர் பேராசையின் மறு உருவமாகிவிட்டார்.

அம்னோ-எதிர்ப்பாளன்: இவ்வளவு பணம் வைத்திருப்பவர் பணி ஓய்வு பெற்றுப் போக வேண்டியதுதானே. ஆனால், போக மாட்டார்.பதவியில் இருக்கும்வரையில்தான் இந்தச் சொத்து சாம்ராஜ்யம் நிலைத்திருக்கும், சரவாக் முதல்வர் பதவியிலிருந்து விலகினால் அதுவும் சரிந்துவிடும் என்பது அவருக்குத் தெரியும்.

ஓடின்:  பிரச்னை என்னவென்றால், அவ்விவகாரத்தில் ஏதாவது செய்யக்கூடிய சரவாக்கியர்கள்(தீவகற்பத்தில் உள்ளவர்களும்தான்)அவருக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.பெரும்பாலான சரவாக்கியர்கள்,தகவல் தொடர்பு வசதிகள் போதுமான அளவில் இல்லாததாலும் படிப்பறிவு இல்லாததாலும் அவ்விவகாரம் பற்றியே அறியாதவர்களாக இருக்கிறார்கள், மாற்றுக்கட்சியினரின் கைகளை அந்த வெண் தலை வேந்தர் கட்டிப்போட்டு விடுகிறார்.

குட்டி பீமன்: மூன்று தசாப்தங்களாக சரவாக் மக்களின் இரத்தத்தையும் வியர்வையையும் பயன்படுத்தி தயிப் குடும்பம் இவ்வளவு பெரிய சொத்தைச் சேகரித்துள்ளது.

13வது பொதுத் தேர்தலிலும் இப்படிப்பட்ட பிஎன்-ஆதரவு அரசியல்வாதிகளுக்குத்தான் வாக்களிக்க வேண்டுமா என்பதை சரவாக்  மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எம்ஏசிசி நாட்டை ஊழலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால்,பிஎம்எப் அறிக்கையை அடிப்படையாக வைத்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்வைபெண்டர்: பணம் கோடிக் கோடியாக இருந்தாலும் இறந்த பின்னர் அதைக் கையோடு கொண்டுபோக முடியாது.ஆனால், கெட்ட பெயரை வாங்கி வைத்திருந்தால்  ஒருவர் இறந்த பின்னரும் அது நிலைத்து நிறகும்.எவ்வளவுதான் பணம் இருந்தாலும் மரியாதையையும் கைச் சுத்தம் என்ற பெயரையும் காசு கொடுத்து வாங்க முடியாது.

குழப்பமற்றவன்: தயிப்பும் அவரின் குடும்பத்தாரும் பணக்காரர்கள் என்பது தெரியும்.ஆனால், இவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்பது மலைக்க வைக்கிறது.

இது எல்லாமே சட்டப்பூர்வமாக வந்தது என்று சொல்லி நம்மை நம்ப வைக்க முடியாது.

கூடவே இருந்து இரத்தத்தை உறிஞ்சிவாழும் ஒட்டுண்ணிபோன்ற இவர்களைப் பதவியிலிருந்து இறக்கி, அவர்கள் குவித்து வைத்துள்ள சொத்துகளை மக்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்.

ஒஸ்கார்: சரவாக் வறிய நிலையில் இருப்பதற்குக் காரணம் இப்போது புலனாகிறது.

பெயரிலி#00130375: சாபாவும் சரவாக்கும் எனக்கு இந்தோனேசியாவையும் பிலிப்பீன்சையும் நினைவூட்டுகின்றன(இரண்டு நாடுகளிலும் நீண்ட காலம் வாழ்ந்த அனுபவம் உண்டு). இரண்டிலும் செல்வத்தில் மிதக்கும் சீமான்கள் சிலர் இருக்கிறார்கள்..ஆனால், அந்நாடுகள் மேம்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

அரசியல்வாதிகள் தங்கள் பெட்டியை நிரப்புவதிலேயே கவனமாக இருப்பார்களானால் மலேசியாவும் அந்நாடுகளைப் போலவே மாறிவிடும்.

ஜெடை: ரிம500,000கணக்கில் குழப்பமாம். சுவாராமைப் போட்டுக் குடைகிறார்கள்.பிஎன் பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகிறது.ஒன்றும் செய்வதில்லை. என்ன அநியாயம்.

சங்லா: ஒரு சர்வாக்கியர் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரராய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே

 

TAGS: