அரசு சாரா அமைப்புக்கள் அச்சுறுத்தப்படுவது: மகாதீர் சித்தாந்தம் திரும்புகின்றதா ?

உங்கள் கருத்து: “பிரதமர் நஜிப் கட்டுப்பாட்டில் நாடு இப்போது இல்லை. அம்னோவில் இயங்கும் குற்றக் கும்பல் சுதந்திரமாகச் செயல்படுகின்றது. மகாதீர் பாணியிலான ஒடுக்கு முறை தொடங்குவதற்கான  அறிகுறிகளே அவை.”

சிவில் சமூக அமைப்புக்கள் ஒடுக்கப்படலாம் என அம்பிகா எச்சரிக்கிறார்

ஒய்எப்: பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா அவர்களே நீங்கள் சொல்வது சரியே. தேர்தல் நெருங்குகிறது. அம்னோவை எதிர்க்கும் எதனையும் மூடும் நடவடிக்கையை நாடு முழுவதும் கெட்ட எண்ணம் கொண்ட அம்னோ தொடங்கி விட்டது. எல்லாவற்றுக்கும் மேல் அம்னோ என்றால் “Umno stands for ‘U Must Not Oppose’ என்பதாகும்.

விரைவில் அனைத்துலக நிதியாளரான ஜார்ஜ் சோரோஸும் சிஐஏ, எப்பிஐ, மொஸாட் போன்ற வேவு நிறுவனங்களும் அரசு சாரா அமைப்புக்களுடன் பிணைக்கப்படுவர். உலகில் தலை சிறந்த ஜனநாயகத்துக்கு (democracy) அல்லது ‘demoncracy’க்கு உங்களை வரவேற்கிறோம்.

மாற்றம்: சிவில் சமூக அமைப்புக்கள் மட்டும் ஒடுக்கு முறையையும் மருட்டலையும் எதிர்நோக்கவில்லை. சூரியன் கீழ் உள்ள அனைத்தும் அல்லது அனைவரும் தன்னை மருட்டுவதாக இந்த அரசாங்கம் எண்ணுகின்றது.

மஞ்சள் சட்டைகளை அணிந்துள்ளவர்கள், வி கழுத்துள்ள சட்டையை போட்டிருப்பவர்கள், படங்களை மிதிக்கும் பதின்ம வயதினர், திருநங்கைகள் ஆகியோர் கூட ஏற்கனவே நலிவடைந்துள்ள சித்தப் பிரமை பிடித்த அரசாங்கத்தை சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள் என  அது நம்புகின்றது.

ஸ்டார்ர்: அரசு சாரா அமைப்புக்கள் அந்நிய நிதிகளைப் பெற்று அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க முயலுகின்றன என அரசாங்கச் சார்பு பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுவது அந்த அமைப்புக்களை ஒடுக்குவதற்கான முன்னேடியாகும். அவை தீய நோக்கம் கொண்டவை. விரக்தியின் விளைவுகள்.

அதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. நாடு எதிர்நோக்கும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு அதிகார வர்க்கம் தயாரித்துள்ள கற்பனைக் கதையே அது.

டுரியோ ஸிபெந்தினுஸ்: பிரதமர் நஜிப் கட்டுப்பாட்டில் நாடு இப்போது இல்லை. மகாதீர் ஆதரவுடன் அம்னோவில் இயங்கும் குற்றக் கும்பல் சுதந்திரமாகச் செயல்படுகின்றது. மகாதீர் பாணியிலான ஒடுக்கு முறை தொடங்குவதற்கான அறிகுறிகளே அவை.

மூத்த குடி மகன்: நீதிக்கும் நியாயமான சமூகத்துக்கும் பல பெண்கள் முன்னின்று போராடுவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நமது மலேசியப் பெண்களுடைய அழகையும் துணிச்சலையும் இது காட்டுகின்றது.

எல்லா மகளிருக்கும் உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். உங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.

அர்பீனா: பொது மக்களை எச்சரிப்பதற்கு அம்பிகா யார் ?

மாற்றம்: அவர் முழுக்க முழுக்க மலேசியர். அதுவும் முதல் நிலைத் தகுதி உள்ளவர். நல்ல சிந்தனை கொண்ட மில்லியன் கணக்கான மலேசியர்கள் அவரைப் போற்றுகின்றனர். உயர்வாக எண்ணுகின்றனர்.

அர்பீனா அந்த முட்டாள்தனமான கேள்வியைக் கேட்பதற்கு நீங்கள் யார் ?

இது என்ன ?: அர்பீனா எச்சரிக்கையை அதுவும் அனுபவம் வாய்ந்தவர்கள், மோசமான சூழ்நிலையை அனுபவித்தவர்கள் சொல்வதை நாm வரவேற்க வேண்டும். தெரியாதவர்களிடமிருந்து மிட்டாய்களை ஏற்க வேண்டாம் என உங்கள் பெற்றோர் உங்களை எச்சரிப்பதைப் போன்றது தான் அது.

நியாயமானவன்: அம்பிகா மனம் தளர வேண்டாம். வைகறைக்கு முன்னர் இருள் சூழ்ந்திருப்பது வழக்கமானதே. அவர்கள் உங்கள் மீது எல்லாவற்றையும் எறிந்துள்ளனர். ஆனால் மக்கள் உங்கள் பின்னால் நிற்கின்றனர். பத்திரிக்கைகள் மீது நம்பிக்கை போய் விட்டது.

ஐகரி: முக்கிய நாளேடுகள் என்ன தான் கதை திரித்தாலும் மலேசியாவை நேசிக்கும் மக்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டு நடப்பு அரசுக்கு வாக்களிக்கப் போவதில்லை.

பிஎன் பின்பற்றுகின்ற மாறுபட்ட போக்கை பாருங்கள்- என்எப்சி-மாட்டு ஊழல், ஸ்கார்ப்பின் நீர் மூழ்கி ஊழல், போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல், வாரிசான் கோபுர ஊழல், தியோ பெங் ஹாக் விவகாரம், தாஜுடின் எம்ஏஎஸ் விவகாரன், அல்தான்துயா விஷயம், பெட்ரோனாஸ் ஊழல் என அது விரிந்து கொண்டே போகும்.

வெறுப்படைந்தவன்: சிவில் சமூக அமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்கள் சிந்திப்பதைக் காட்டிலும் வேகமாக பிஎன் புதை மணலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. விரக்தி அடைந்தவர்களே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவர்.அவர்கள் நெருப்பை நெருப்பைக் கொண்டு எதிர்க்கின்றனர். இறுதியில் அதாவது 13வது பொதுத் தேர்தலில் அவர்களே எரிந்து போவார்கள்.

அடையாளம் இல்லாதவன்_3e86: அதிகாரத்தை இழக்கும் நிலையில் உள்ள ஆட்சியாளர்களே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவர் என்பதை நமக்கு வரலாறு காட்டியுள்ளது.

 

TAGS: