2012ல் இந்தியா, சீனாவுக்கான சிறப்புத் தூதர்களுக்காக 365,000 ரிங்கிட் செலவு செய்யப்பட்டது

அரசாங்கம் இவ்வாண்டு இது வரையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இரண்டு சிறப்புத் தூதர்களுக்கு 365,000 ரிங்கிட் செலவு செய்துள்ளது.

முன்னாள் பொதுப் பணி அமைச்சருமான இந்தியாவுக்கான சிறப்புத் தூதர் எஸ் சாமிவேலுக்கு மொத்தம் 324,000 ரிங்கிட்டும் சீனாவுக்கான சிறப்புத் தூதரான முன்னாள் மசீச தலைவர் ஒங் கா திங்-கிற்கு மொத்தம் 41,000 ரிங்கிட்டும் செலவு செய்யப்பட்டுள்ளன.

அந்த விவரங்களை பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது வெளியிட்டார்.

வெகு வேகமாக வளர்ச்சி கண்டு  வரும் இந்திய, சீனப் பொருளாதாரங்களிலிருந்து நன்மை அடைவதற்கு உதவியாக “நமது வலிமை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது” என அந்த மூத்த தேசியத் தலைவர்கள் நியமனத்தையும் அதனால் ஏற்படும் செலவுகளையும் தற்காத்துப் பேசிய நஸ்ரி நியாயப்படுத்தினார்.

சாமிவேலு மாதம் ஒன்றுக்கு 27,000 ரிங்கிட் சம்பளம் பெறுகிறார். அவருக்கு மூன்று அதிகாரிகளும் இரண்டு டிரைவர்களும் போலீஸ் காவலர் ஒருவரும் வழங்கப்பட்டுள்ளனர்.

ஒங்-கிற்கு 20,000 ரிங்கிட் மாதச் சம்பளம் கொடுக்கப்படுகின்றது. அவர் இரண்டு சிறப்பு அதிகாரிகளைப் பெற்றுள்ளார்.

 

TAGS: