நஜிப்பின் மக்கள் செல்வாக்கு பிஎன்னைக் காப்பாற்றுமா?

உங்கள் கருத்து : “2008 பொதுத் தேர்தலுக்குமுன் மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பாக் லா-வின் மக்கள் செல்வாக்கின் மதிப்பீட்டளவு 71விழுக்காடு என்று காண்பித்தது.”

நஜிப்பின் செல்வாக்கு சரிவதை ஆய்வு காண்பிக்கிறது

மாற்றத்தின் முகவர்:44விழுக்காட்டினர் பிஎன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.30விழுக்காட்டினர்தான் பக்காத்தான் ரக்யாட்டுக்கு வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறார்கள்.

ஆக, புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பிஎன்னுக்குத்தான்.

ஆனால், பிரதமர் நஜிப் ரசாக்கும் பிஎன்னும் மலாயாப் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகளை நம்பவில்லை.அதனால்தான்  தேர்தல் எப்போது என்பதைச் சொல்லவே அஞ்சுகின்றனர்.

ஐகுரி: நஜிப்-அன்வார் விவாதத்துக்காக இன்னும் காத்திருக்கிறோம்.

விவாதத்தில் கலந்துகொள்ள நஜிப் மறுப்பது அவருக்குத் துணிச்சல் இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.

அடுத்து ஆட்சி அமைக்கும் ஆற்றல்கொண்ட இரு கட்சிகளின்  உயர் தலைவர்கள் வாதமிடுவது எங்கும் நடக்கும் ஒன்றுதான்.ஆஸ்திரேலியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆகியவற்றிலும் வேறு சில நாடுகளிலும் அப்படிப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன்.

ஆனால்,நஜிப் அது மலேசிய கலாச்சாரமல்ல என்று கூறி வாதமிடுவதைத் தவிர்க்கிறார்.

ஜெரார்ட் லூர்துசாமி: அதுதான் சுவர்மேல் எழுத்தாக தெளிவாகத் தெரிகிறதே. இறைத் தலையீடு இருந்தாலொழிய-அது  சாத்தியமில்லை- 13வது பொதுத் தேர்தலில் அம்னோ-பிஎன் மண்ணைக் கவ்வுவது உறுதி.

அதைத் தடுக்க 2013பட்ஜெட்டில் மக்களின் பணத்தைப் பயன்படுத்தி இனிப்புகளை வாரி வழங்கப் போகிறார்கள்.ஆனால், அவர்கள்மீதிருந்த நல்லெண்ணம் நம்பிக்கை எல்லாம் அடியோடு போய்விட்டது.மக்கள் அரசாங்கம் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அதற்கு நிரந்தரமாக  பணி ஓய்வு கொடுப்பார்கள்.

#27342##65#:பன்னாட்டளவில் ஜனநாயகவாதி என்ற பொய்முகத்தைக் காண்பித்து புகழ் பெற்று வந்திருக்கிறார் நஜிப்.

ஆனால், நாட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும், அவர் சொன்ன சொல்லைக் காப்பாறுவதில்லை என்பது. ‘மலேசியாவே உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு’, ‘மக்களுக்கே முன்னுரிமை’ என்ற நஜிப்பின் பாடல்கள் இப்போது எடுபடுவதில்லை.

அவரது தளபதிகளே, படைவீரர்கள் இல்லா படைத்தலைவர் என்று அவரைக் கிண்டலடிக்கிறார்கள்.செல்வச் செழிப்பில் பிறந்த அவருக்கு எல்லாமே எளிதாகக் கிடைத்தது.

அதனால்தான் விவாதத்துக்கு அழைக்கும்போது அச்சவாலை ஏற்க அஞ்சுகிறார்.அவர் என்றுமே ஒரு போராளியாக இருந்ததில்லை.

கொதித்துப் போயிருப்பவன்: ஆய்வின் முடிவு அப்படி இருக்கும் பட்சத்தில் நஜிப், இனி தம் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள இன்னொரு வெளிநாட்டு நிறுவனத்தை அமர்த்துவார்.அதற்கும் மக்களின் வரிப்பணம்தான் செலவிடப்படும்.

அப்படியே அவருக்கு அபரிதமான மக்கள் செல்வாக்கு இருந்தாலும் திசைமாறும் காற்றையும் மாற்றத்தைக் கொண்டுவரும் அலைகளையும் தடுக்கவோ ஊழல், கொடூரம், வீண்விரயம், கொள்ளை எனப் பல தீய மூட்டைகளை நிறையவே சுமந்துகொண்டிருக்கும் ஓட்டைப் படகை நீரில் மூழ்காமல் காப்பாற்றவோ அந்த ஒன்று மட்டும் போதுமா?

பெர்ட் டான்: நஜிப்பின் மக்கள் செல்வாக்கு 61விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பதே பிஎன்-னின் முடிவு நெருங்கி விட்டது என்பதைச் எச்சரிக்கும் அறிகுறியாகும்.

2008 பொதுத் தேர்தலுக்குமுன் மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பாக் லா-வின் மக்கள் செல்வாக்கின் மதிப்பீட்டளவு 71விழுக்காடு என்று காண்பித்தது.ஆனால், நடந்தது என்ன?

எனவே, நஜிப்பின் செல்வாக்கு 61விழுக்காடாகக் குறைகிறது என்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

தலைவெட்டி: நஜிப் அவர்களே, மக்களை விலைகொடுத்து வாங்க முடியாது. ஆக, அதைச் செய்வோம் இதைச் செய்வோம், மிகப் பெரிய வெற்றி பெறுவோம் என்று பிஎன் தலைவர்கள் சொல்வதெல்லாம் வெறும் பீற்றல் என்பது தெளிவாகிறது.

கண்டாபிரிஜியன்: 2008-இலும் இப்படித்தான் சொன்னார்கள்.முடிவு வெளியானபோது பாக் லா(அப்துல்லா) வாயடைத்துப் போனார். செய்தியாளர்களிடம் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.

 

TAGS: