உங்கள் கருத்து: “பிரச்னைகள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை பக்காத்தானுடையது என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டும். பிகேஆர், பாஸ், டிஏபி என தனித்தனியாக பிரிக்கப்படக் கூடாது”
உட்பூசலும் ஊடக தாக்குதலும் பக்காத்தானுக்கு சரிவைத் தருகின்றன
சின்ன அரக்கன்: அத்தகைய ஆய்வுகளை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அது பொதுவாகக் காட்டுவதற்கு ஒர் அடையாளம் என்றாலும் தவறு நிகழ்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பதில் அளித்தவர்கள் உண்மையில் தங்கள் எண்ணங்களில் உறுதியாக இருக்கின்றனரா என்பதைக் கணிப்பது மிக மிகச் சிரமம்.
பக்காத்தான் ராக்யாட் ஊடகங்களின் குறிப்பாக பத்திரிக்கைகளின் கடுமையான தாக்குதலை எதிர்நோக்குகிறது என்பது உண்மையே. என்றாலும் அதன் தலைவர்கள் தங்களது வேறுபாடுகளுக்கும் ‘தனிப்பட்ட’ மோதல்களுக்கும் நிரந்தர முடிவு காண இன்னும் கொஞ்சம் காலமே உள்ளது.
பக்காத்தான் எல்ல முக்கியமான விஷயங்களிலும் ஒரே குரலில் பேச வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பிரச்னைகள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை பக்காத்தானுடையது என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டும். பிகேஆர், பாஸ், டிஏபி என தனித்தனியாக பிரிக்கப்படக் கூடாது
அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பொதுவான களத்தில் ஒன்றாக நிற்க முடியாமல் தங்கள் சொந்த சித்தாந்தகளைப் பெற்றிருந்தால் அவர்களுடைய ‘பல வகையான குரல்களை” வாக்காளர்கள் செவிமடுக்க மாட்டார்கள். புத்ராஜெயாவுக்கான அவர்கள் பயணம் தொடங்காது.
ஜெரார்ட் லூர்துசாமி: அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்குச் சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கு அம்னோ/பிஎன் போராடும் என்பதே என் கணிப்பாகும். ஆனால் பக்காத்தானுக்கு ஆதரவாக இருப்பதற்காக சபா, சரவாக் எம்பி-க்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயேச்சைகளாக மாறுவர்.
அதனால் பக்காத்தான் அரசாங்கத்தை அமைக்கும். கிழக்கு மலேசியாவுக்கான தனது வாக்குறுதிகளை அன்வார் இப்ராஹிம் நிறைவேற்றியதும் அந்த எம்பி-க்கள் அதிகாரப்பூர்வமாக பக்காத்தான் கட்சிகளில் இணைவார்கள். அம்னோ அரசாங்க ஆதரவு இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது என்பதால் அது நிச்சயம் சிதறும்.
ஆனால் இங்கு முக்கியமான கேள்வி இது தான்: அம்னோவிலிருந்து வெளியேறும் பிகேஆர், பாஸ் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா ? அம்னோ உருவகத்தில் நாங்கள் பக்காத்தான் அரசாங்கத்தைக் காண விரும்பவில்லை.
திசைமாறி: தேர்தல் ஆணையம் சுயேச்சையானது நியாயமானது என 48 விழுக்காட்டினர் நம்புவதாகக் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? செவ்வாய்க் கிரகத்திலா ?
உங்கள் அடிச்சுவட்டில்: எந்த ஆய்வும் செய்யாமாலேயே 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என நான் நம்புகிறேன்.
பிரச்னைகள் அல்லது கொள்கைகளுக்கு அதனுடன் தொடர்பு இல்லை. காரணம் அவை அம்னோ/பிஎன் -னுக்கு எதிராக உள்ளன. ஊடகங்கள் கதைகளை ஜோடிப்பதற்கும் அதனுடன் தொடர்பு இல்லை. ஏனெனில் அவை வேண்டுமென்றே அவ்வாறு செய்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.
அது இந்த நாட்டில் பெரும்பான்மை இனமாக இருக்கும் மலாய்க்காரர்களுடன் எல்லா வகையிலும் தொடர்பு உடையது. அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் எப்படிப் பார்க்கப் போகிறார்கள் என்பதையும் அது சார்ந்துள்ளது. அவர்கள் தங்களை மலேசியர்களாக பார்த்து மற்ற இனங்களுடன் எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா அல்லது தங்களது ‘ketuanan Melayu’ (மலாய் மேலாண்மை) சித்தாந்தத்தில் பிணைந்திருக்க விரும்பிகின்றனரா என்பதே அதுவாகும்.
அம்னோ/பிஎன் பிரச்சார எந்திரம் வெளியிட்டு வருகின்ற எல்லா குப்பைகளும் நம்பப்படுமா என்பதும் அதில் அடங்கியுள்ளது.
ஜிமினி கிரிக்கெட்: நஜிப் அதனை நம்புகிறார். 2008ல் பாக் லா-வும் (அப்துல்லா அகமட் படாவி) அவ்வாறு நம்பினார். தேர்தல் நாள் வரையில் அது துல்லிதமாக இருந்தது.