மகாதீரின் கடைசிச் சீட்டு- சோரோஸ் கார்டு

உங்கள் கருத்து: “யூத இனம் என எதனைச் சொன்னாலும் அதனை மலாய்க்காரர்கள் பாவமாக எண்ணுவர் என மகாதீர் நம்புகிறார். அவர் யூதர்களுடன் நட்புக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக் கூடாது.”

போரில் பிழைத்த சோரோஸிடம் மகாதீர் என்ன சொன்னார் ?

ஈப்போக்காரன்: கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நல்ல பெயர் வாங்கி விடலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் மகாதீருடைய போர் எதிர்ப்பு திட்டத்துக்குத் தமது பெயரைத் தந்துதவ சோரோஸ் மறுத்து விட்டார். இப்போது மகாதீர் அவரை இகழ்கிறார். உதை பந்தாகப் பயன்படுத்துகின்றார்.

#27342##65#: இது மகாதீருடைய கடைசி சீட்டு. 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னால் மலாய்க்காரர்களை தமக்கு பின்னால் அணி திரளச் செய்வதற்கு இறுதி விரக்திப் போராட்டமாகும்.

அவர் யூதர்களுடன் நட்புக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக் கூடாது. அவர் கடந்த 50 ஆண்டுகளாக மலாய்க்காரர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளார். மலாய் சகோதரர்களே, கால தாமதமாவதற்கு முன்னர் விழித்துக் கொள்ளுங்கள். மகாதீர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார்.

‘இறுதி மனித உரிமையை’ சாதிக்கும் முயற்சிகளில் ‘எல்லாப் பொய்களுக்கும் அன்னையான’ மகாதீர் உதவுவார் என்பதை சோரோஸ் நம்பவில்லை. அதனால் அவரது அழைப்பை நிராகரித்தார். அந்தப் ‘பிசாசுக்கு’ ஆதரவு அளிக்காதாதின் மூலம் சரியான முடிவை சோரோஸ் எடுத்துள்ளார்.

இன்று சோரோஸ் மீது மகாதீர் தொடுக்கின்ற தாக்குதல்கள் மூலம் அவருடைய உண்மையான குணத்தை உலகம் அறிந்து கொண்டுள்ளது.

1998ல் “மகாதீர் ஊழல்கள்” என்னும் கட்டுரையில் மகாதீர் குறித்து சோரோஸ் தெரிவித்த கருத்துக்களை படிக்குமாறு வாசகர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.. மகாதீர் தமது நாட்டுக்கு ஆபத்தானவர் என சோரோஸ் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

டாக்: போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு தமது பெயரைத் தந்து உதவுமாறு மகாதீர் விடுத்த வேண்டுகோளுக்கு ‘முடியாது’ என சோரோஸ் சொல்லியிருக்க வேண்டும். அதனால் ஆத்திரமடைந்த மகாதீர் சோராஸைக் கண்டிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

சிம்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபே-யை தமது நல்ல நண்பராகக் கொண்டிருக்கும் ஒருவருக்கு யார் உதவுவார்கள் ?

பார்வையாளன்: மகாதீர் சோரோஸுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “என் சொந்த ஊரில் ஜப்பானியர்கள் ஒர் இளம் பிரிட்டிஷ் வீரரைக் குத்திக் கொன்றது என் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது”

அதனுடன் தொடர்பு இல்லாத ஒரு சம்பவமான கம்போங் மேடான் கொலைகளுக்குக் காரணமானவர்களும் அதனைச் செய்தவர்களும் இன்னும் கண்டு பிடிக்கப்படவே இல்லை. அதற்குக் காரணம் அந்தச் சம்பவத்திற்கு மகாதீருடைய ஆதரவு இருந்ததே எனக் கூறப்படுகின்றது.

ஆகவே குத்திக் கொல்லப்பட்ட அந்தச் சம்பவம் மகாதீர் உள்ளத்தில் எத்தகைய மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது என்பதே கேள்வி ஆகும்.

டாக்டர் ஜக் #04496187: பத்தாங் காலி படுகொலைகள் பற்றி மகாதீர் பேச மறுக்கிறார். சீருடை அணிந்திருந்த, சீருடை அணியாத பிரிட்டிஷ் வீரர்கள் ஆயுதம் ஏதுமில்லாத அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றது குறித்து அவர் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை ( அவருக்கு உணர்வு ஏதும் இருந்தால்).

மகாதீர் சொல்வதைப் போல அந்த இளம் பிரிட்டிஷ் வீரர் சீருடையில் இருந்தார். போரையும் ஆணைக்கு இணங்க கொல்வதையும் சொல்ல முடியாத கொள்கைகளையும் நாம் கண்டிக்கலாம். ஆனால் போர்க்களம் என்பது செய்  அல்லது செத்து மடி என்பதாகும். அதுதான் விதிமுறை.

அடையாளம் இல்லாதவன்#71627369: தாம் இளைஞராக இருந்த போது பார்த்த கொலையைக் கண்டு அதிர்ந்து போனதாக மகாதீர் சொல்கிறார். நமது வட்டாரத்துக்கு அருகில் கிழக்குத் தீமோரில் நிகழ்ந்த கொடூரங்கள், இலங்கைத் தமிழர்கள் அழிவு, நமது ஒராங் அஸ்லி மக்கள் இடம் மாற்றப்பட்டது ஆகியவை குறித்து அவர் கண்ணீரும் சிந்தவில்லை. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

பாலஸ்தீனப் போராட்டத்துக்கு அவர் அளிப்பதாக கூறப்படும் ஆதரவு சமயத்தை நோக்கமாகக் கொண்டது அல்லது அரசியல் ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஆதரவு கூட எனக்குச் சந்தேகத்தையே தருகின்றது.

சாதாரணம்: அந்த முன்னாள் கொடுங்கோலரான இரட்டை வேடதாரி தமது சொந்தக் கொல்லைப்புறத்தில் மலாய்க்காரர்களை சிறுபான்மை இனங்களுக்கு எதிராகத் தூண்டி விட முயலுகிறார். அவர் போர் எதிர்ப்பு முயற்சிகள் பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது.

HYL: வெளிப்படையாகக் கொல்வது தவறாகும். ஆனால் உங்கள் எதிரிகளை நீங்கள் மௌனமாகக் கொன்றது சரியா ?

உங்கள் முன்னாள் துணைப் பிரதமரும் நடப்பு பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராஹிம், ஹுசேன் ஒன், துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோருடைய  அரசியல் எதிர்காலத்தை குலைத்தீர்கள்.

மலாய்க்காரர்களுடைய போட்டி ஆற்றலையும் ஒழித்து விட்டீர்கள். மலேசியப் பொருளாதாரத்தையும் நீங்கள் சீரழித்து விட்டீர்கள்.

ஆனால் மகாதீர் அவர்களே, இப்போது கொல்வது தவறு என நீங்கள் சொல்கின்றீர்கள்.

ஸ்டார்ர்: மகாதீருடைய வெவ்வேறான குணங்களை, இரட்டை வேடத்தை, தந்திரங்களை மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் கட்டுரைகள் தெளிவாக காட்டியுள்ளன.

 

TAGS: