‘பெர்சே கேள்வியில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை’

ஜோகூர் பாருவில் உள்ள SMK Aminuddin Baki பள்ளிக்கூடம், நன்னெறிக் கல்வி பாடத்துக்கான த்னது எஸ்பிஎம் சோதனை தேர்வு வினாத்தாளில் பெர்சே 3.0 பேரணியை சட்ட விரோதமானது என வருணிக்கும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து தான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.

“நாங்கள் அந்த விஷயத்தை அரசியலாக்க எண்ணவில்லை. நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.”

“நாங்கள் நல்ல பண்புகளையும்  அந்தப் பேரணியின் போது ஏற்பட்ட சேதங்களைப் பற்றி மட்டுமே வலியுறுத்துகிறோம்,” என மலேசியாகினி இன்று தொடர்பு கொண்ட போது அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் வான் ஹஜ்ஜாஷாம் ஹருண் கூறினார்.

அந்த ஏப்ரல் 28ம் தேதி பேரணிப் படம் ஒன்று அந்த சோதனைத் தேர்வு வினாத் தாளில் போடப்பட்டு கீழ் வரும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது: “சட்ட விரோதப் பேரணி ஒன்றில் பிரஜை ஒருவர் பங்கு கொள்வது நியாயமானதா ?”

அதற்கு சரியான பதில் ‘நியாயமானது அல்ல’ என்பதாகும்.