உங்கள் கருத்து: ஆர்ஒஎஸ் அலுவலகம் அம்னோவுக்காக ஆடுகிறது

“எல்லா அரசாங்க அமைப்புக்களும் அம்னோ நிறுவனங்களா ? தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த அவை எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.”

சுவாராமை இழுப்பதற்கு ஆர்ஒஎஸ் அலுவலகம் போலீசை சேர்த்துக் கொண்டுள்ளது

பெர்ட் தான்: ஒரு நிறுவனத்தின் மீது கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பெற்றுள்ளது சிசிஎம் என்ற  மலேசிய நிறுவன ஆணையமாகும். ஆனால் அது அபத்தமான முறையில் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமை விசாரிக்கும் பொறுப்பை ஆர்ஒஎஸ் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளது.

சுவாராமை செயலிழக்கச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் சிசிஎம் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதையே ஆர்ஒஎஸ் அலுவலகமும் போலீஸும் விசாரணையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது தெரிகிறது..

ஆகவே அச்சுறுத்தும் வேலை தொடங்கியுள்ளது. தங்களுக்கு ஏதாவது கிடைத்து குற்றம் சாட்டும்  வரையில் சம்பந்தப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பின் துயரத்தை தொடருவதே அதன் நோக்கம்.

உண்மையில் பெரிய விஷயம் பணயம் வைக்கப்பட்டுள்ளது ( ஸ்கார்ப்பின் ஊழல் விசாரணை) பிரபலமான அரசு சாரா அமைப்பு ஒன்றை ஒடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு பிஎன் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

அதனால் அது கல்வி கற்ற நடுத்தர மக்களுடைய ஆதரவை ஒரளவு இழக்கக் கூடும். ஆனால் அது குறித்து அது கவலைப்படவில்லை. சட்டத்தை அமலாக்குவதில் அப்பட்டமான அத்துமீறல்களை நாம் பார்க்கிறோம். பிஎன் போலீசாகவும் நீதிபதியாகவும் ஜுரியாகவும் தண்டனையை நிறைவேற்றுகின்றவராகவும் செயல்படுகின்றது.

தலை வேட்டைக்காரன்: ஆர்ஒஎஸ் அலுவலகம் அம்னோ கோமாளியைப் போல நடந்து கொள்கின்றது. அதனை வருணிப்பதற்கு வேறு சொற்கள் இல்லை. அது தனது நடவடிக்கைகளுக்கு என்ன பரிதாபகரமான காரணங்களை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் யாரும் அவற்றை நம்பப் போவதில்லை. அதற்கு வெட்கமே இல்லை.

கோச்சா: அந்த அழைப்பாணையைக் கொடுக்க மூன்று கார்களில் ஆர்ஒஎஸ் அலுவலக அதிகாரிகள் சென்றனர். இது முழுக்க முழுக்க மக்கள் பணத்தை விரயமாக்கும் காரியமாகும்.

ஆர்ஒஎஸ் அலுவலகம் தனது வலிமையைக் காட்ட விரும்பியிருக்கலாம். அந்த அலுவலகத்தில் பல கோப்புக்கள் பல மாதங்களாக ஏன் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடப்பதை நாம் அறிவோம். ஏன் சுவாராம் விவகாரம் இவ்வளவு முக்கியமாகி விட்டது ?

அனோன்xyz: பிஎன் அரசாங்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. அம்னோவையும் அதன் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக சுவாராமை அச்சுறுத்தி பிரன்ஸில் நிகழும் ஸ்கார்ப்பின் விசாரணையை நிறுத்தச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்.

நீதிமன்ற நடவடிக்கைகளிலும் போலீஸ் விசாரணைகளிலும் சுவாராம் முழுக் கவனத்தைச் செலுத்தும்படி செய்து வேறு எதனையும் அது சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் செய்ய அரசாங்கம் விரும்புகிறது.

அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கிலும் அது அதனைத்தானே செய்தது.

பச்சை: எல்லா அரசாங்க அமைப்புக்களும் அம்னோ நிறுவனங்களா ? தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த அவை எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

அவற்றின் ஊழியர்களுக்கான ஊதியங்களை மக்கள் கொடுக்கின்றனர். என் பணம் எனக்கு திருப்பித் தரப்பட வேண்டும். முடியுமா ?

முஷிரோ: ‘ஆளும் கட்சி’ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தப்பித்துக் கொள்ளலாம் என்ற இடி அமின் ஆட்சியைப் போன்ற சர்வாதிகார ஆட்சியில் நாம் வாழ்வது போன்ற தோற்றத்தை எனக்கு அது அளித்துள்ளது. ‘சர்வாதிகார’ விருப்பு வெறுப்புக்களுக்கு இணங்க மக்கள் தெரிவு செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம் என்ற நிலையே அதுவாகும். அந்த தலைவரை ‘இறைவனாக’ எண்ணி விரைவில் ‘பிரார்த்தனை’ செய்ய வேண்டிய நிலைக்கும் நாம் தள்ளப்படலாம்.

ஜேகே7462000: அரசியல் அடக்குமுறையை அவர்கள் தொடர விட்டு விடுங்கள். அவர்களுக்கே அது பாதகமாக முடியும்.

அடையாளம் இல்லாதவன்1234@: பிஎன் அரசாங்கம் மீது எனக்கு இருந்த மரியாதையும் முற்றாகப் போய் விட்டது. பிஎன் வேட்பாளர் நல்லவராக இருந்தாலும் நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை.

அடையாளம் இல்லாதவன்_40dd: தகவல்களை அம்பலப்படுத்தும் சுவாராமிடமிருந்து ஊதுகோலைப் பிடுங்குவதற்கு  அவர்கள் முயலுகின்றனர். அடுத்த நடவடிக்கை சுவாரமின் வங்கிக் கணக்கை முடக்குவதாகும். ஊழல் மேலும் அம்பலமாவதை அதனால் தடுக்க முடியும் என அவர்கள் எண்ணுகின்றனர்.

 

TAGS: