பிரதமர்: புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது

புக்கு ஜிங்கா- பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை பொருத்தமான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

அதே வேளையில் பிஎன் கொள்கைகள் நிரூபிக்கப்பட்டவை என்றார் அவர்.

“புக்கு ஜிங்கா அது அச்சிடப்பட்ட காகித மதிப்புக் கூட இல்லாதது,” எனக் கூறிய அவர் கோலாலம்பூரில் 44வது கெரக்கான் தேசியப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த போது கூறினார்.

பிடிபிடிஎன் என்ற உயர் கல்விக் கடன் நிதிய ரத்துச் செய்யும் பக்காத்தான் திட்டம் 2020 வாக்கில் மக்கள் வரிப்பணத்தில் 50 பில்லியன் ரிங்கிட் செலவு பிடிக்கும் எனக் குறிப்பிட்ட அவர் அது சாத்தியமல்ல என்றார்.

நெடுஞ்சாலை டோல் கட்டணங்களை அகற்றும் பக்காத்தான் திட்டமும் முற்றிலும் சாத்தியமற்றது என வருணித்த நஜிப், அதனால் முழுப் பங்குச் சந்தையும் சீர்குலையும் எனத் தெரிவித்தார்.

“டோல் கட்டணங்களை வசூலிப்பதற்கு சலுகை பெற்றுள்ள நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள். டோல் கட்டணங்களை ரத்துச் செய்யும் போது முழு புர்சா மலேசியா பங்குச் சந்தையும் நிலை குலைந்து விடும்,” என்றார் பிரதமர்.

அதற்கு நேர்மாறாக BR1M 2.0 என்னும் ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டம் உட்பட தமது கொள்கைகள் மக்களுடைய ஆதரவைப் பெறும் நோக்கத்தைக் கொண்டுள்ளது அல்ல என்றும் அவர் சொன்னார்.

“”நாங்கள் BR1M 2.0-ஐ செய்தோம். அவர்கள் பெர்சே 2.0ஐ செய்ய முடிந்தது. நீங்கள் பெர்சே 2.0ஐ செய்தீர்கள். நாங்கள் BR1M 2.0-ஐச் செய்கிறோம். நீங்கள் தடுப்புக்களை உடையுங்கள். போலீஸ் கார்களை தலைகீழாகக் கவிழுங்கள். நாங்கள் மக்களுக்கு உதவி செய்கிறோம்,” என்றார் பிரதமர்.

பக்காத்தான் உண்மை நிலைக்குப் புறம்பான திட்டங்களை வாக்குறுதிகளாக அளிப்பதோடு சாத்தியமான அரசாங்கத்தை அமைப்பதற்கான முன் நிபந்தனைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனித்தனி அமைப்புக்கள்

முதலாவதாக பக்காத்தானுக்கு பொதுவான சின்னம் கூட கிடையாது. ஒரு கூட்டணியாகக் கூட அது தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. அதனால் அவை தேர்தலில் வெவ்வேறான கொள்கை அறிக்கைகள் வழி தனித்தனி அமைப்புக்களாக போட்டியிடப் போகின்றன.

அதற்கு நேர்மாறாக பிஎன் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது. எல்லா வேட்பாளர்களும் பிஎன் போராட்டத்துக்கு விசுவாசமாக இருக்கின்றனர் என நஜிப் தெரிவித்தார்.

“வெவ்வேறு முகங்களுடன் எதிர்த்தரப்பு தேர்தலுக்குச் செல்லும். சிலருக்கு அவர்கள் தோற்றம் சந்திரனைப் போன்றது. மற்றவர்களுக்கு அந்தத் தோற்றம் ஏவு கணையாகும். அவர்களை ஏவுகணை சந்திரனுக்கு கொண்டு செல்லப் போவதைப் போல.”

“அடுத்து கண் இருக்கின்றது. மிகவும் வேடிக்கையாகத் தோற்றமளிக்கும் கண்,” என அவர் குறிப்பிட்டார். வெவ்வேறான சின்னங்களுடன் பக்காத்தான் கொள்கைகளும் மோதிக் கொள்கின்றன எனக் கூறிய நஜிப் இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பதில் கூட பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் இணக்கமில்லை- எடுத்துக்காட்டுக்கு ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதா இல்லையா என்பதைக் கூறலாம் என்றார்.

“இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது உங்களிடம் பொதுவான நிலையும் கொள்கையும் இல்லை. நாட்டை நிர்வகிப்பதற்குத் தேவையான நம்பகத்தன்மை உங்களிடம் இல்லை.”

இறுதியாக காத்திருக்கும் ஒர் அரசாங்கம், நிழல் அமைச்சரவையை அமைக்க வேண்டும். அதனைப் பக்காத்தான் செய்யவில்லை. இது வரையில் பக்காத்தான் அதனைச் செய்யவில்லை. அதற்கு ‘அச்சமே ‘ காரணம் என்றார் பிரதமர்.

“அரசாங்கத்தை அமைப்பது பற்றிப் பேச வேண்டாம். முதலில் நிழல் அமைச்சரவையை அமையுங்கள்,” என்றார் அவர்.

 

TAGS: