அன்பளிப்புகளுடன் வரும் அம்னோ தலைவர்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்

உங்கள் கருத்து:  “நஜிப் அவர்களே, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் நீங்கள் விட்டெறியலாம். பணத்தால் உங்களைப் பதவியிலிருந்து அகற்றும் எங்கள் முடிவை மாற்ற இயலாது”.

2013 பட்ஜெட்-சில முக்கிய அம்சங்கள்

விஜய்47:  2013 பட்ஜெட்டில் அம்னோ, தேர்தலைக் கருத்தில்கொண்டு அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளது. வெற்றிபெறுவதற்காக கடைசிபட்சமாக, தனக்கு நன்கு பழக்கமான ஒரு முயற்சியில்- வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.

வருமான வரியில் சில நன்மைகள் உண்டு என்பதைத் தவிர பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க விசயம், பொருளாதாரத்தை முடுக்கிவிட்டு அதை மேலும் உயரத்துக்குக் கொண்டு செல்லும் விசயம் எதுவுமில்லை. ஆனால், அன்பளிப்புகளை அள்ளிக் கொடுப்பதன்வழி அதை பிரதமர் நஜிப் ரசாக் மூடி மறைத்து விட்டார்.

மலேசியாவை, உலகின் மதிப்பையும் மரியாதையும் பெறும் அளவுக்கு உயர்த்தப் போவதாகக் கூறினாரே அதற்கு அவரது திட்டம் என்ன? 22 ஆண்டுக்கால ஊழலையும் தப்பான ஆட்சியையும் எப்படி ஒழிக்கப் போகிறார்?

விழிப்பானவன்:  வேடிக்கையாக இருக்கிறது. 2008 மார்ச் 8- க்குப் பிறகு அரசாங்கத்தால் இவ்வளவு கொடுக்க முடிகிறது என்றால், முன்பே இதைக் கொடுக்காதது ஏன்?

ஏன் அரசாங்கம் மக்களின் நலனை அப்போது எண்ணிப் பார்க்கவில்லை? பாடநூல்களுக்கு பற்றுச் சீட்டுகள், விவேக கைபேசிகளுக்கு விலையில் கழிவு, பிஆர்1எம் 1.0, பிஆர்1எம் 2.0 போன்றவை எல்லாம் 2008-க்கு முன் எங்கு போயின?

விவேகி:  உயர்கல்வி கடனை மொத்தத்தையும் செலுத்தினால் 20 விழுக்காடு தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பணக்காரர்களும் இதுவரை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களும் கடனில் 20விழுக்காடு தள்ளுபடி பெறுகிறார்கள். இது என்ன நியாயம்.

ஒடின்:  பட்ஜெட், வாக்குகளை வாங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருகிறது. ஆனால், மேற்கு மலேசியாவில் மட்டுமே அது எடுபடும். கிழக்கு மலேசியர்களுக்கு அதில் எதுவுமில்லை.

ஜிரோனிமோ:  நஜிப் அவர்களே, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் நீங்கள் விட்டெறியலாம். பணத்தால் உங்களைப் பதவியிலிருந்து அகற்றும் எங்கள் முடிவை மாற்ற இயலாது.

எங்களை விலை கொடுத்து வாங்க முயலாதீர்கள். முன்பு அது கைகொடுத்திருக்கலாம். ஆனால், இப்போது வேலை செய்யாது. இதுவே உங்கள் கடைசி பட்ஜெட்டாக இருக்கும்.

வெளியேற இந்த வழி:  நடப்புச் செலவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரிம200 பில்லியனுக்குமேல். அதில் மூத்த குடிமக்களுக்காக கடப்பிதழ் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு மட்டுமே உங்களால் கொடுக்க முடிந்திருக்கிறது.

மூத்த குடிமக்களைப் பிச்சைக்காரர்களை நடத்துவதுபோல் நடத்தாதீர்கள். அதைத் திருப்பி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஹீரோ325:  நடைமுறைச் செலவினத்தையும் மேம்பாட்டுச் செலவினத்தையும் ஒப்பிட்டால் 4.06:1.0 என வருகிறது-அதாவது மேம்பாட்டுக்காக செலவிடுவதைவிட நடைமுறைச் செலவினம் நான்கு மடங்கு அதிகம்.இது ஆரோக்கிமானதல்ல.

எல்லாருக்கும் நீதி, நியாயம்:  இப்படி அள்ளிக் கொடுக்கிறார்களே, கடைசியில் கூட்டிப்பார்த்தால் எல்லாம் சேர்த்து எவ்வளவு வருமோ என்றுதான் கவலையாக இருக்கிறது. தேவையில்லாதவர்களுக்கும் ‘இலவசங்கள்’ கொடுக்கப்படுவதன் நோக்கம்தான் என்ன.

வரி செலுத்தும் மலேசியர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ அரசாங்கத்தின் வெற்றிக்கு அவர்கள்தான் கொட்டிக்கொடுக்க வேண்டியுள்ளது.

மகோராங்:  தேர்தல் ஆண்டில் இப்படிப்பட்ட அன்பளிப்புகள் கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்.

TAGS: