“யார் துரோகி ? அதிகாரத்தைத்தையும் மக்கள் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மக்களா அல்லது உண்மைகளை வெளியிடும் மக்களா?”
உத்துசான்: மலேசியாகினி ‘மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’
ஒய்கே சுவா: உத்துசான் மலேசியா அம்னோ குரலாக திகழுவதால் மலேசியாகினி சுதந்திரம் குறித்து கருத்துரைக்க அதற்கு அருகதை இல்லை.
மலேசியாகினி நல்ல பயனுள்ள மாற்று ஊடகம் என நான் மனநிறைவு கொண்டுள்ளேன். இல்லை என்றால் தி ஸ்டார், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், உத்துசான், பெரித்தா ஹரியான் போன்றவை அன்றாடம் வெளியிடும் குப்பைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஏரியஸ்46: மலேசியாகினிக்கு எதிராக அடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பது கால விரயமாகும். பயனற்றதாகும். ஏனெனில் முக்கிய நாளேடுகள் ஆளும் வர்க்கத்துக்குச் சொந்தமானவை அல்லது அதன் கட்டுக்குள் உள்ளன.
அவை தவறு செய்கின்றவர்களை பாதுகாக்கின்றன. ஊழல்களை மறைக்கின்றன. மக்களிடமிருந்து உண்மையை மறைக்கின்றன.
மலேசியாகினி வெற்றியைக் கண்டு பொறாமை கொண்டுள்ள வட்டாரங்கள் தொடுக்கும் எந்த மருட்டலையும் அந்த இணையத் தளம் துணிச்சலாக போராட வேண்டும்.
எல்லாம் குப்பை: மலேசியாகினி மன்னிப்புக் கேட்க வேண்டுமா ! அதற்கு மாறாக பிஎன் அரசின் இனவாதத்தை தனது கட்டுரைகள் வழி பரப்பியதற்காகவும் பிஎன் அரசாங்கத்தின் பொய்களையும் ஊழலையும் உண்மைகளையும் மக்களிடமிருந்து மறைத்ததற்காகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கட்சிகள் மீது விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதற்காகவும் உத்துசான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
டெலிஸ்டாய்: ஆகவே யார் துரோகி ? அதிகாரத்தைத்தையும் மக்கள் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மக்களா அல்லது உண்மைகளை வெளியிடும் மக்களா ?
அபத்தங்களை வெளியிடுவதை உத்துசான் நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த செய்தி இணையத்தளம் அம்னோவை ஆதரிக்கவில்லை என்பதற்காக அது திடீரென அந்நியர்களுடைய கருவியாகி விட்டது.
உத்துசான் சிந்தனைகள் வற்றிப் போன ஊடகமாகும். அதற்கு அம்னோ ஊக்கமளிக்கிறது. அதனால் அது அம்னோ கைப்பாவையாகத் திகழ்கிறது.
மாட் மலேசியா: உத்துசான் மிலாயு பெர்ஹாட் குறித்து இப்போதுதான் ஒர் ஆய்வு செய்தேன். அதன் தீர்க்காத கடன்கள் அளவு 420 மில்லியன் ரிங்கிட் ஆகும். கடந்த ஆண்டு அதன் ஆதாயம் வரிக்குப் பின்னர் 2.26 மில்லியன் ரிங்கிட்தான்.
WSLAm: ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்திகளை ஜோடிப்பதை உத்துசான் ஒப்புக் கொண்டுள்ளதை மறக்க வேண்டாம்.
லூயிஸ்: கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் உடனான தொடர்பு பிரச்சாரம் தோல்வி கண்டால் மலேசியாகினி தலைவர் மா சே துங் என பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என அம்னோ துடிக்கிறது. பெரிய பொய்களைச் சொல்வது முக்கிய விஷயமல்ல. அவை முற்றாக இஸ்லாத்திற்கு விரோதமானவை என்பதே முக்கியம்.
ஒட்டக்காரன்: எல்லா மலேசியர்களிடமும் மலேசியாகினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என உத்துசான் கூறுவதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.
நான் ஒரு மலேசியன். நான் அந்த முட்டாள்தனமான கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதை வன்மையாக எதிர்க்கிறேன்.
அடையாளம் இல்லாதவன் #19098644: மலேசியக் கடற்படை குறித்த ரகசியங்களை பிரஞ்சுக்காரர்களிடம் எப்படி விற்க முடியும் என உத்துசான் பிரதமர் நஜிப் ரசாக்கிடமும் அவருடைய சேவகர்களிடமும் கேட்க வேண்டும். அது தேசத் துரோகம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.