பெர்சே: வாக்காளர் பட்டியலை மீண்டும் ஒரு தடவை சீர்படுத்த வேண்டும்

வாக்காளர் பட்டியலில் அண்மையில் மேலும் பல தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால், பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம்  மீண்டும் ஒரு தடவை அதைச் சீர்படுத்த வேண்டும் என்று பெர்சே வலியுறுத்தியுள்ளது.

“ஒருவரின் பெயர் “ ” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதை ஒரு மோசடி என்று சொல்லவில்லை, ஆனால் இப்படிப்பட்ட தவறுகளைத் தேர்தல் ஆணையம் திருத்த வேண்டும்.

“தேர்தல் ஆணையம் ஒவ்வொரு நாளும் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது,  ஆனால், எங்கே?”, என்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார். இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் பேசினார்.

“13வது பொதுத் தேர்தல் 2013-க்குத் தள்ளி வைக்கப்படுமானால் வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்த வேண்டும் என்று பெர்சே வலியுறுத்த விரும்புகிறது. அதற்கு நாங்களும் மற்ற என்ஜிஓ-களும் உதவத் தயாராக இருக்கிறோம்”.

பெர்சே வெளியிட்ட ஒரு படத்தில் ஒரு வாக்காளரின் பெயர் “ ” என்று வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்து.  பிந்துலு நாடாளுமன்றத் தொகுதியிலும் கிடுரோங் சட்டமன்றத் தொகுதியிலும் அந்தப் பெயர் பதிவாகியிருந்தது.

அத்தவறு இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து இசி அதை மாற்றியது.இப்போது அஜீஸ் ஜூலாஹி என்ற பெயர் அந்த இடத்தில் உள்ளது.

பெர்சே பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை

தேர்தல் சீரமைப்பு தொடர்பில் பெர்சே-இன் எட்டுக் கோரிக்கைகளையும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) முன்வைத்த பரிந்துரைகளையும் இசி நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அம்பிகா குறை கூறினார்.

இசி, அழியா மையைப் பயன்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது என்றாலும் அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் பெர்சேக்கு திருப்தி அளிக்கவில்லை.

“அழியா மை வாக்களிப்புக்கு முன்னர் விரலில் தடவப்படும் என்கிறார்கள். ஆனால், வாக்களித்த பின்னர் அதைத் தடவுவதுதான் முறையாகும்.

“அழியா மை எப்படிப் பயன்படுத்தப்படும் என்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆர்வமுள்ள அரசு-சாரா அமைப்புகளுக்கும் இசி ஒரு செயல்முறை விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்”.

பெர்சே கோரிக்கைகளையும் பிஎஸ்சி-இன் பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று இசி–க்கு அழுத்தம் கொடுப்பதற்காக அடுத்த ஞாயிற்றுக்கிழமை அக்கூட்டமைப்பு கிளானா ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

“இதுவரை செய்யப்பட்டதில் எங்களுக்குத் திருப்தி இல்லை.  அதனால்தான் அந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்”, என்று அம்பிகா தெரிவித்தார்.

TAGS: