“முதலமைச்சர் குற்றவாளி எனச் சொல்வதற்கு 1,001 விதிகள் இருக்க வேண்டும். ஊழலும் அதிகார அத்துமீறலும் அவற்றுள் அடங்கும்.”
மலாக்கா அரசாங்க நிறுவனங்கள் மெகா கெண்டுரிக்கு ‘ஆதரவு’ அளித்தன
பி தேவ் ஆனந்த் பிள்ளை: பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும் மலாக்காவில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள் இன்னும் அம்னோவுக்குத் தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் பொதுப் பணத்தின் மூலம் அம்னோபுத்ராக்கள் முதலில் நன்மை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் நன்கு ஊறிப் போய் விட்டது. அதிலிருந்து மிஞ்சுவது மட்டுமே அவர்களுடைய ‘கூஜா தூக்கிகளுக்கு’ கிடைக்கும்.
ஒவ்வொரு மலாய்க்காரரின் பிறப்புரிமை என்பது ஆயுட்காலத்துக்கு இனிமேல் ‘இலவச சாப்பாட்டு டிக்கெட்’ இல்லை என்பதை மலாய்க்காரர்கள் உணர்ந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.
இன்ஸ்பெக்டர் குளுசோ: பி தேவ் ஆனந்த் பிள்ளை நன்றாகச் சொன்னீர்கள். எல்லாம் மலாய்க்காரர்களும் அப்படிப்பட்டவர்கள் என நான் சொல்ல மாட்டேன்.
ஒரு சிலர் நீண்ட காலமாக அளவுக்கு அதிகமாக விழுங்கி ஏப்பமிட்டு வருவதால் மிஞ்சுவது அருகிக் கொண்டே வருகிறது. அதனால் உண்மையை உணரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சின்ன அரக்கன்: மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழக ஆவணம் சொல்வது உண்மை என்றால் அந்த ‘மெகா கொண்டுரி’ அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
அது பிஎன் தலைவர் சம்பந்தப்பட்டுள்ளதால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ‘மிகவும் பொறுமையாக’ இருக்கும். நூற்றுக்கணக்கான அல்லது ஏன் ஆயிரக்கணக்கான புகார்கள் கிடைக்கும் வரையில் அது காத்திருந்து ‘ஏதாவது ஒரு வகையில்’ பூர்வாங்க விசாரணைகளை நடத்துமாறு அதற்கு ‘பச்சைக் கொடி’ காட்டப்பட்டதும் அது நடவடிக்கை எடுக்கும்.
அந்தப் ‘பூர்வாங்க’ விசாரணை சில ஆண்டுளுக்கு அல்லது அதற்கும் மேல் நீடிக்கும். தாமதம் ஏன் என்று யாரும் கேட்கக் கூடாது. “போதுமான ஆதாரம்” இல்லாததால் அந்த விசாரணைகள் கால ஒட்டத்தில் மூடப்பட்டாலும் ஆச்சரியப்படக் கூடாது.
அடுத்து பிஎன் -னில் உள்ள எல்லா ஊழல் அரசியல்வாதிகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.
அடையாளம் இல்லாதவன்_4192: பக்காத்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் இது நிகழ்ந்திருந்து எதிர்த்தரப்பைச் சேர்ந்த முதலமைச்சர் அதில் சம்பந்தப்பட்டிருந்தால் என்ன நடக்கும் தெரியுமா ?
பிஎன் கட்சிகள் பெரிய பிரளயத்தையே கிளப்பியிருக்கும். பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, மசீச எம்பி சுவா தீ யோங், எல்லா பிஎன் ஆதரவு வலைப்பதிவாளர்கள் ஆகியோர் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருப்பார்கள்.
அரமெகடோன்: முதலமைச்சர் குற்றவாளி எனச் சொல்வதற்கு 1,001 விதிகள் இருக்க வேண்டும். ஊழலும் அதிகார அத்துமீறலும் அவற்றுள் அடங்கும்.
துரதிர்ஷ்டவசமாக பிஎன் அரசாங்கச் சிந்தனைகள் மோசமாக இருப்பதால் முதலமைச்சர் இப்போது தான் பிறந்த சிசுவைப் போன்று நிரபராதி என அறிவிக்கப்படும். அந்த ஆவணத்தை கசிய விட்டவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
மேப்பிள்சிராப்: மலேசியர்கள் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நாம் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் -னை வெளியேற்ற வேண்டும். அல்லது நமது தலைவர்கள் தங்களது சொந்த கெண்டுரி-களுக்கு வரிப் பணத்தைப் பயன்படுத்துவதைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வீரா: எல்லாம் அரசாங்க ஆதரவு. ஆனால் விருந்தினர்கள் கொடுக்கும் அன்பளிப்புக்களையும் ‘ஆங் பாவ்’களையும் மணமகனும் அவரது குடும்பமும் வைத்துக் கொள்ளும். உண்மையிலேயே பணம் பண்ணுவதற்கு மிக நல்ல வழியாகும்.
ஐகிக்: துணைப் பிரதமர் முஹைடின் யாசினுக்கு அந்த சம்பவம் அலி ரூஸ்தாமை வெளியேற்றுவதற்கு நல்ல வழியைக் காட்டியுள்ளது. ஏனெனில் அவரது பதவிக்கு அலி ரூஸ்தாம் பெரிய சவாலாக இருந்தார்.
உண்மையில் சில காலத்திற்கு முன்பு அம்னோ தேர்தலில் பண அரசியலில் சம்பந்தப்பட்டதாக அலி ரூஸ்தாம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரது ஆட்களுடைய ஆதரவு கிடைக்காமல் போகும் என்ற அச்சத்தால் அவருக்கு ‘மன்னிப்பு’ கொடுக்கப்பட்டது.
இது தான் அம்னோ சித்தாந்தம். ஒவ்வொருவரும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இயங்குகின்றனர்.
அடையாளம் இல்லாதவன்_5fb: இது ‘ ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட ‘ நிதியாக இருக்க வேண்டும். லாபிஸ் எம்பி சுவா தீ யோங் அவர்களே நீங்கள் அதனை ஒப்புக் கொள்கின்றீர்களா ? இந்த வகையான நிதி அளிப்பில் அம்னோ ஆட்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்.