மெகா கெண்டுரி: மலாக்கா முதலமைச்சருக்கு இன்னும் புரியவில்லை

உங்கள் புதல்வர் திருமணத்துக்கு 130,000 விருந்தினர்கள் வந்தது பெரிய விஷயமே இல்லை. அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு விருந்து கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதே சர்ச்சைக்குரிய விஷயமாகும்.”

பக்காத்தானுக்கு பொறாமை, பகைமை என்கிறார் அலி ரூஸ்தாம்

அபாஸிர்: மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாம் அம்னோ ஊழலையும் அகங்காரத்தையும் பிரதிநிதிக்கிறார்.

அந்த நிகழ்வுக்கு அரசாங்க அமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டதும் அவரது அதிகாரத்துவ பதவியைப் பயன்படுத்தி திருமணத்துக்கு ஆதரவு தேடப்பட்டதும் தவறு என்பது பெரும்பாலான மலேசியர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் ஏற்கனவே கறை படிந்த ஒரு தலைவர் வழக்கமான அம்னோ அகங்காரத்துடன் பதில் அளித்துள்ளார்.

அவருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கும் மலாய் சமூகம் உண்மையை உணர வேண்டும். அவர்களைப் பிரதிநிதிப்பதற்கு நாகரீகமான, இறைவனுக்கு அஞ்சும், சட்டத்தைப் பின்பற்றும் மலாய்க்காரருக்கு அந்தத் தலைவர் நல்ல எடுத்துக்காட்டா ?

ஜேகே7462000: அடக்கடவுளே ! அலி ரூஸ்தாம் எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். உங்கள் புதல்வர் திருமணத்துக்கு 130,000 விருந்தினர்கள் வந்தது பெரிய விஷயமே இல்லை.

அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு விருந்து கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதே சர்ச்சைக்குரிய விஷயமாகும். ஒரு நபருக்கு 10 ரிங்கிட் வைத்தால் கூட 1.3 மில்லியன் ரிங்கிட் வருகிறது. 600,000 ரிங்கிட் அல்ல.

அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய மாநில அரசாங்க எந்திரம் பயன்படுத்தப்பட்ட போது அது அதிகார அத்துமீறலாகும். அதை விட பில்களுக்கான செலவுகளை அவர் ஏற்றுக் கொள்ளாமல் மாநில அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் பொது நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகும்.

செம்பருத்தி: பொது மக்கள் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்தும் தமது புதல்வர்  திருமணத்துக்கு அரசு நிறுவனங்களின் பணத்தைப் பயன்படுத்தியதின் மூலம் ஊழல் புரிந்துள்ளதை அலி ரூஸ்தாம் புரிந்து கொள்ளத் தவறியுள்ளார்.

தமது குடும்ப நிகழ்வை அவர் அரசாங்க நிகழ்வல்ல. தனிப்பட்ட நிகழ்வு அதனால் மாநில நிதிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை அவர் உணரவில்லை. முதலமைச்சராக இருப்பதற்கே அவருக்குத் தகுதி இல்லை என்பதை அது காட்டுகிறது. அந்த நிதி அளிப்பு சட்ட விரோதமாகும்.

அடையாளம் இல்லாதவன்: அலி ரூஸ்தாம் அவர்களே, நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவனும் அல்ல. பொறாமை உணர்வு கொண்டவனும் அல்ல. ஆதரவாளர்களைத் தேடுவதற்குப் பதில் உங்கள் சொந்த வங்கிக் கணக்கிலிருந்து ஏன் பணத்தைக் கொடுக்கக் கூடாது ? ரொக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் வேறு வகையாகப் பெறுவதற்கும் என்ன வித்தியாசம் ?

My Gay-dar Is Working Fine: மலேசியாவில் எங்கு உணவு கிடைக்கிறதோ அங்கே மக்கள் இருப்பர்கள். மலாக்கா முதலமைச்சர் நடத்திய ‘அடக்கமான’ விருந்துக்கான நிதி மக்கள் வரிப் பணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதை அறிந்திருந்தால் பெரும்பாலான மக்கள் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரு நிகழ்வுக்கு உங்கள் பணம் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிந்தால் நீங்கள் உண்மையான மலேசியராக இருந்தால் ‘உங்களை இழப்புக்களை மீட்பதற்கு’ அல்லது ‘பயனடைவதற்கு’ நீங்கள் அந்த நிகழ்வுக்குச் செல்வீர்கள்.

ஐகிக்: இலவசமாக உணவு கொடுக்கப்படும் எந்த இடத்திலும் கூட்டம் அதிகம் காணப்படும். அந்தத் திருமணத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுக்கப்பட்டதால் பலர் அங்கு சென்றனர். அந்த நிகழ்வுக்கு முன்னர் மலாக்கா சாலைகளில் பெரிய பெரிய தோரணங்கள் வைக்கப்பட்டிருந்தன.

பல விருந்தினர்கள் பல உணவுப் பொட்டலங்களைக் கொண்டு சென்றதை நாங்கள் பார்த்தோம். ஆகவே 600,000 ரிங்கிட் என்பது குறைவான மதிப்பிடாகும். கூடாரங்கள், நாற்காலிகள், மேசைகள், மற்ற வசதிகள் ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை.

ஒய் எப்: அலி ரூத்ஹாம் உங்களுக்கு இன்னும் விளங்கவே இல்லை. உங்கள் ஆடம்பரம் பற்றி ஏமாற்றம் அடைந்துள்ளது மக்களே. உங்களுக்கு அந்த 600,000 ரிங்கிட் எங்கிருந்து வந்தது ? ஏன் பக்காத்தான் ராக்யாட்டை குறை சொல்கின்றீர்கள் ?

ரிக் தியோ: அலி ரூஸ்தாம் அவர்களே உங்கள் புதல்வர் திருமணத்துக்கு நீங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்திருந்தால் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் உங்கள் புதல்வர் திருமணத்துக்கு அரசு நிறுவன நிதிகளை நீங்கள் பயன்படுத்தினால் அது ஊழல்.

TAGS: