“தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு வில்லியம் போர்டோன் வேண்டுகோள் விடுத்துள்ளது வெறும் சவால் தான். அதற்கு அவர்கள் எப்படிப் பதில் தரப் போகின்றனர் என்பதே முக்கியமானது.”
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க பிரஞ்சு வழக்குரைஞர் போர்டோன் ஒப்புதல்
பால் வாரென்: இளம் மலேசிய பத்திரிக்கையாளர் மன்றத் தலைவர் சுல்கர்னெயினும் அவரது அரசு சாரா அமைப்பும் வடி கட்டின முட்டாள்கள். பாரிசில் நடைபெறும் விசாரணை, மலேசியக் குற்றவாளிகள், கொலைகாரர்கள் பற்றியது என அவர் எண்ணுகிறார். உங்களுக்காக நான் இதனை மீண்டும் சொல்கிறேன்.
லஞ்சம் கொடுப்பதில் அல்லது அதற்கு உதவி செய்வதில் தங்கள் நாட்டு நிறுவனம் ஒன்று கிரிமினல் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா இல்லையா என்பதைப் பற்றியே பிரஞ்சுக்காரர்கள் அக்கறை கொண்டுள்ளனர். மலேசியாவில் லஞ்சம் வாங்குவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதை பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை.
மலேசியாவில் மன்கோலியர் ஒருவர் கொலையுண்டதிலும் அது முழுக்க முழுக்கச் சரியானது என்பதிலும் அவர்களுக்கு கவலையே இல்லை. மலேசியாவில் பிரதமர் 10 மனைவிகளை வைத்திருந்தாலும் ( ரோஸ்மா மான்சோர் ஒரு வினாடி கூட அதனை அனுமதிக்க மாட்டார்) அவர்களுக்கு அக்கறை இல்லை.
பிரஞ்சு நிறுவனம் ஒன்றும் அதன் அதிகாரிகளும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனரா என்பதே அவர்கள் விசாரணையாகும். அதற்காகவே அவர் நஜிப் அப்துல் ரசாக் என்ற ஒருவருக்கும் அப்துல் ரசாக் பகிந்தா என்ற ஒருவருக்கும் அவர்கள் சபீனா ( சாட்சியமளிக்க அழைப்பாணை) வெளியிடக் கூடும்.
மலேசியாவில் என்ன நிகழ்ந்தாலும் முழு ஸ்கார்ப்பின் பேரமும் சட்டப்பூர்வமானது யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் பாரிஸுக்கு அது முக்கியமல்ல. ஆகவே ஸ்கார்ப்பின் ஒர் உள்நாட்டு விவகாரம் என எப்படி நீங்கள் சொல்ல முடியும் ? எந்த உள்நாட்டு விஷயம் பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள் ?
ஜெரார்ட் லூர்துசாமி: சுவாராமுக்கு இதில் ஏன் அக்கறை ? நம்மைப் போன்று அதன் உறுப்பினர்களும் வரி செலுத்துகின்றவர்கள். ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி கொள்முதல் குறித்த முழு உண்மையை அவர்கள் அறிய விரும்புகின்றனர். ஏனெனில் பெரிமெக்காருக்கு கையூட்டாகக் கொடுக்கப்பட்ட 500 மில்லியன் ரிங்கிட் உட்பட நமக்கு அந்த நீர்மூழ்கிக்காக பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவாகியிருக்கிறது.
நமது சொந்த அரசாங்கத்துக்கு உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் அக்கறை இல்லை. அதனால் நாம் பிரஞ்சுக்காரர்களை நம்ப வேண்டியுள்ளது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் தயவு செய்து நஜிப்பும் ரசாக் பகிந்தாவும் பிரான்ஸில் சாட்சியமளிக்க வேண்டும்.
சுவாராமுக்கு செல்வந்தர் ஜார்ஜ் சோரோஸ் அல்லது வேறு எந்தப் பிசாசோ நிதி உதவி செய்கிறது என்பது பற்றி பெரும்பாலான மலேசியர்களுக்கு அக்கறையே இல்லை. எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
பத்திரிகையாளர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் சுல்கர்னெய்ன் போன்றவர்கள் உண்மையைக் கண்டு பிடிப்பதில் அக்கறை காட்டாமல் பிஎன் அரசாங்கம் சொல்வதை தற்காக்க தயாராக உள்ளனர். ஆகவே பிரஞ்சு நீதிமன்றங்கள் போன்ற சுதந்திரமான பாரபட்சம் காட்டாத வட்டாரங்களிலிருந்து உண்மையை அறிந்து கொள்ள பொது மக்களுக்கு உரிமை உண்டு.
அடையாளம் இல்லாதவன் #33877536: உண்மையைக் கண்டு ஒருவர் ஏன் பயப்பட வேண்டும் ? மலேசியர்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாகவும் தொழில் ரீதியாகவும் ஸ்கார்ப்பின் கொள்முதல் நடத்தப்பட்டிருந்தால் யாரும் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. ஏன் இவ்வளவு தடைகளும் நாடகங்களும் ?
தான் கிம் கியோங்: ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிப் பேரத்தில் சுவாராமுக்கு ஏன் அக்கறை ? அதற்கு என்ன ஈடுபாடு உள்ளது ? அந்தப் பேரத்தின் மூலம் அதற்கு இழப்பு ஏதும் ஏற்பட்டதா ?”
அந்தக் கேள்விகளை எழுப்பியதின் மூலம் தமது முட்டாள்தனததை சுல்கர்னெய்ன் அம்பலப்படுத்தி விட்டார். ஊழல் வழி தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என எண்ணுகின்ற மக்களை அவர் பிரதிநிதிக்கிறார்.
இவ்வாறு கண்மூடித்தனமாக கீழ்படிந்து நடப்பதால் தான் தாங்கள் தவறாக வழி நடத்தப்பட்டு முன்னேற முடியாமல் இருப்பதை சுல்கர்னெய்ன் போன்றவர்கள் எப்போது தான் உணருவார்கள் ?
மேடை_சரிகிறது: சுல்கர்னெய்ன் அவர்களே ஏன் போலீசில் புகார் செய்கின்றீர்கள் ? நீங்கள் கொள்ளையடிக்கப்பட்டீர்களா அல்லது உதைக்கப்பட்டீர்களா ? நமது நாடு கொள்ளையடிக்கப்படும் போது உண்மையை அறிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இருக்காதா ? மக்களுக்கு சிறந்த சேவையாற்றிக் கொண்டிருக்கும் சுவாராமைக் கேள்வி கேட்க நீங்கள் யார் ?
பல இனம்: ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளில் சுவாராமுக்கு அக்கறை ஏன் சுல்கர்னெய்ன் வினவுகிறார். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நோக்கம் பற்றியும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஸ்கார்ப்பின் உள்நாட்டு விவகாரம் என்றும் அது உள்நாட்டிலேயே விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
சுல்கர்னெய்ன் மிகச் சிறந்த ‘கூஜா தூக்கி’ என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் முட்டாளா என்ன ? அந்த விவகாரத்தை மலேசியர்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருவது சுவாராமுக்கு உரிமை உண்டு. நாம் அந்த நீர்மூழ்கிகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் காட்டிலும் அதிகமான விலை செலுத்தியுள்ளதால் மக்கள் வரிப்பணம் அந்தப் பேரத்தில் பெருமளவு இழக்கப்பட்டுள்ளது.
அது குறித்து கேள்வி எழுப்பும் உரிமை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வாருக்கும் நிச்சயம் உண்டு. அவர் அவ்வாறு செய்யா விட்டால் மற்ற பிஎன் எம்பி-க்களைப் போன்று ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள் என நாங்கள் அவரைக் கேள்வி கேட்போம். எந்த அதிகாரியும் அதன் மீது உள்நாட்டில் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் சுவாராம் வெளிநாட்டுக்குச் சென்றது.
நியாயமானவன்: கயிறு இறுகுகிறது. தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு வில்லியம் போர்டோன் வேண்டுகோள் விடுத்துள்ளது வெறும் சவால் தான். அதற்கு அவர்கள் எப்படிப் பதில் தரப் போகின்றனர் என்பதே முக்கியமானது.
இயான்2003: குறும்புத்தனமான புகாரைச் செய்து போலீசார் மிகவும் அவசரமான கடமைகளை செய்வதற்குத் தடையாக இருப்பதாக சுல்கர்னெய்ன் மீது புகார் கொடுக்கபப்ட வேண்டும்.