நஸ்ரி: இசி, பிரதமர்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல

தேர்தல் ஆணையம் (இசி) ஒரு சுயேச்சை அமைப்பு. பேரரசரால் நியமிக்கப்பட்ட அது அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்பதை அரசாங்கம் வலியுறுத்துகிறது.

“அதன் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்பார்வை இடுவது மட்டுமே பிரதமர்துறையின் பணியாகும்”, என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் மக்களவை கேள்வி நேரத்தின்போது கூறினார்.

“எனவே, அந்த ஆணையத்தை நாடாளுமன்றத்தின் நேரடிப் பார்வையின்கீழ் கொண்டுவர வேண்டியதில்லை”.

இசியை, நாடாளுமன்றத்துக்குப் பதில்கூறும் பொறுப்பில் வைக்க வேண்டும் எனத் தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு தெரிவித்துள்ள பரிந்துரை செயல்படுத்தப்படுமா என்று அறிந்துகொள்ள விரும்பிய செள கொன் இயோவுக்கு (டிஏபி- தஞ்சோங்) நஸ்ரி இவ்வாறு மறுமொழி கூறினார்.

TAGS: