வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் ‘இறுதியாக்கப்படுகின்றன’

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கு வகை செய்யும் திருத்தங்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தின் முடிவில் தயாராகி விடும்.

அந்தத் தகவலை இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் வெளியிட்டார்.

“சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடமிருந்து எங்களுக்கு கருத்துக்கள் கிடைத்துள்ளன. நாங்கள் அந்தத் திருத்தங்களுக்குத் தேவையான விதிமுறைகளையும் பாரங்களையும் இறுதி முடிவு செய்து வருகிறோம்,” என அவர் இசி தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“அரசமைப்பு, சட்ட மாற்றங்கள் அவசியமில்லை எனத் தெரிய வந்துள்ளது. விதிமுறைகளையும் பாரங்களையும் மாற்றினால் போதும். நாங்கள் அவற்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்.”

மலேசியர்கள் முதலில் தங்களை சாதாரண வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு நினைவுபடுத்தினார்.

 

TAGS: