“நன்னெறிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு செய்திகளை கொடுப்பதும் பொது மக்கள் தகவல் தெரிவிப்பதும் உத்துசானுடைய பணி அல்ல. இன, சமய வன்முறைகளைத் தூண்டி விடுவதே அதன் தலையாய நோக்கமாகும்.”
தேவாலயம் பினாங்கு முதலமைச்சரைக் கண்டித்ததாக உத்துசான் பொய் சொல்கிறது
வெறுப்படைந்தவன்: தேவாலயம் வழக்குப் போடப் போவதில்லை. காரணம் கிறிஸ்து அதனை வலியுறுத்தவில்லை. ‘ஆம்’ என்றால் ‘ஆம்’. ‘இல்லை’ என்றால் ‘இல்லை’. அதற்கு மேல் எதைச் சொன்னாலும் அது உண்மையல்ல.
உத்துசான் தனது அரசியல் எஜமானர்களுக்கு தோதாக விஷயங்களை திசை திருப்பி பொய்களைக் கூறினால் இறைவன் அதன் மீது தீர்ப்பு வழங்கட்டும்.
பொய்களைச் சொல்வதும் ஏமாற்றுவதும் மலாய்க்காரர்களையும் கல்வி கற்காதவர்களையும் தங்களை ஆதரிக்கும்படி செய்வதற்கு பிஎன் பற்றும் வழிமுறையாகும். அதற்கு முக்கியமாக முக்கிய ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாததால் அத்தகைய மக்களுக்கு மாற்று ஊடகங்களை அடைய வழி இல்லை. குறிப்பாக தீவகற்ப மலேசியாவின் உட்புறப்பகுதிகள், சபா, சரவாக் ஆகியவற்றுக்கு அது பொருந்தும்
சவுத்பாவ்: லூதரன் எவாஞ்சிலகல் தேவாலய ஆயர் சாலமன் ராஜாவும் மலேசியத் தேவாலய மன்றத் தலைவர் தாமஸ் பிலிப்ஸும் மீண்டும் மீண்டும் உத்துசான் வலைக்குள் விழுகின்றனர். என்ன வேடிக்கை!
இப்போது ஏன் உத்துசானை குறை சொல்ல வேண்டும் ? உத்துசான் எப்படி இயங்குகிறது என்பது உங்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். இருந்தும் நீங்கள் அதற்குப் பேட்டியளிக்க நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கீனீர்கள்.
தான் கிம் கியோங்: உத்துசானில் நிருபர்கள் என யாரும் இல்லை என்பது இன்னேரம் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். நிருபர்கள் என்ற போர்வையில் ஜோடனையாளர்களும் தூண்டி விடுகின்றவர்களும் உண்மையை மறைக்கின்றவர்களுமே மட்டுமே அதில் வேலை செய்கின்றனர்.
நன்னெறிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு செய்திகளை கொடுப்பதும் பொது மக்கள் தகவல் தெரிவிப்பதும் உத்துசானுடைய பணி அல்ல. இன, சமய வன்முறைகளைத் தூண்டி விடுவதே அதன் தலையாய நோக்கமாகும். அவ்வளவு தான்.
ஸ்விபெண்டர்: உத்துசான் பொய் சொல்வதை நிறுத்த முடியாது. காரணம் அது அதன் மரபணுவாகும் (டிஎன்ஏ). அது உண்மையாக மன்னிப்புக் கேட்கவில்லை. அதன் பொய்களை அம்பலப்படுத்துவதும் அதற்கு அதனை ஈடு கட்டுமாறு செய்வதுமே சிறந்த நடவடிக்கை ஆகும்.
பால் வாரென்: அந்த உத்துசான் நிருபர்களை நீங்கள் மன்னிக்கத்தான் வேண்டும். அவர்களுக்கு கிறிஸ்துவ நன்னெறிகள் தெரியாது. அவர்களுக்கு ஏமாற்றுவதை அனுமதிக்கும் தங்கள் சொந்த நெறிமுறைகள்தான் அவர்களுக்குத் தெரியும்.
தோலு: உத்துசான் நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருடைய கற்பனை வளம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டதால் அரசியல் கற்பனை நாவல்களை எழுதுவது பற்றி அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.