ரிம40 மில்லியன் எங்கிருந்து வந்தது?

உங்கள் கருத்து:  ஹாங்காங்கிலிருந்து  ரிம16மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக

பெயரிலி #37634848: சாபா அம்னோவுக்கோ சாபா முதலமைச்சர் மூசா அமானுக்கோ ரிம40 மில்லியன் கொடுத்தது யார்? எதற்கு?

பணம் அம்னோவுக்குத்தான் என்றால், இப்படி எவ்வளவு பணம் அம்னோவுக்குக் கிடைத்தது என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்வார்களா? மக்களுக்குப் பதில் தேவை.

ஓடின்: மூசா ஒரு பாவமும் அறியாதவர், ஐயா, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக் போல.

ஆனால், பணம் எங்கிருந்து வந்தது? நிச்சயமாக விக்டோரியா துறைமுகத்துக்கு அடியிலிருந்து வந்திருக்க முடியாது.

மூஷிரோ: எப்படிப் பார்த்தாலும் இது மெகா-ஊழல்தான். ஆனால், இது ஊழல் என்னும் பனிப்பாறையின் நுனிப் பகுதிதான்.

பெயரிலி #32993250: இது அம்னோலாந்து. இங்கு எல்லா வகை ஊழல்களுக்கும் இடமுண்டு. என்ன…ஊழல்கள் மில்லியன் கணக்கில் இருக்க வேண்டும்.

ஒஸ்கார்: குற்றம் எதுவும் நிகழவில்லை என்பதற்காக ஹாங்காங் ஊழல்தடுப்பு சுயேச்சை ஆணையம்(ஐசிஏசி) நடவடிக்கை எடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் அதுவும் சும்மா இருந்து விட்டது.

Ez24: பணம் எங்கிருந்து வந்தது? அது சட்டப்பூர்வமான பணம்தானா? வருமான வரி செலுத்தப்பட்டதா?

எம்ஏசிசி விசாரணையைச் சுருக்கமாக முடிதுக்கொண்டது வியப்பளிக்கவில்லை.

டிபிஎன்: அம்னோ, பணம் கொடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் எங்களுக்குத் தேவை. அதைத் தரவில்லை என்றால் இது “டூயிட் ஹராம்” என்ற முடிவுக்குத்தான் வருவோம்.

இப்படியெல்லாம் நடக்கிறது.இதையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டிலுருந்து ரிம250,000 பெற்றதற்காக சுவாராமை விரட்டிக் கொண்டிருக்கிறார்களே.

பல்லினத்தான்: யாரோ ஒருவரின் கணக்கில் பெரும்பணம் போடப்பட்டுள்ளது. இது ஊழல் இல்லை என்றால் வேறு எதுதான் ஊழல்.
அது அம்னோ சாபாவின் பணம் என்பதை நஸ்ரி ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படியானால் யார்மீது ஊழல் குற்றம் சாட்டுவது? அம்னோ சாபாமீதா மூசாமீதா?

பெர்ட்டான்: சங்கப் பதிவதிகாரி அவர்களே, எங்கே சென்றீர்? மூசா அமானைக் குற்றவாளி அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய நஸ்ரி, சாபா அம்னோவே குற்றவாளி என்பதைச் சுட்டிக்காட்டி விட்டார்.

இது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி. ஹாங்காங்கில் கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். ஏன் ஆர்ஓஎஸ் விசாரணை மேற்கொண்டு சாபா அம்னோவின் அலுவலகத்தைச் சோதனை இடவில்லை? ஆதாரம் எதுவுமே இல்லாமல் அவர்கள் சுவாராமை விரட்டிக்கொண்டு போகவில்லையா.

பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க வெளிநாட்டில் உள்ள கள்ளப்பணம் எல்லாம் திரும்பி வரும், பார்த்துக்கொண்டே இருங்கள்.

குழப்பற்றவன்: நேர்மையான அமைப்புகள் பணத்தை வங்கி வழி மாற்றி விடுவார்கள், கையிலும் பையிலும் பணத்தைத் தூக்கிக் கொண்டு அலைய மாட்டார்கள்.

எங்களை என்ன, மடச் சாம்பிராணிகள் என்று நினைத்தீர்களா? எவராவது ஒருவர் அது சட்டவிரோத பணமாக இருந்தால் தவிர, அது யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்று நினைத்தால் ஒழிய, அவ்வளவு பணத்தை ஒரு பெட்டியில் பதுக்கி வைத்திருப்பாரா?

ஜேகே46200: நஸ்ரி அவர்களே, ஒன்றை மறந்து விட்டீர்கள். பையில் இருந்த பணம் மூசாவுக்கோ அம்னோவுக்கோ….எப்படி இருந்தாலும் அது கடத்தல் பணம்தானே?

சட்டப்பூர்வ பணமாக இருந்தால் எதற்காகக் கடத்த வேண்டும்?

TAGS: