நஜீப் கூறுகிறார்: சோரோஸ் என்னைச் சந்திக்க விரும்பினார்

சர்ச்சைக்குரிய நாணய வியூகர் ஜோர்ஜ் சோரோஸை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை பிரதமர் நஜிப் இன்று ஒப்புக்கொண்டார். ஆனால், சோரோஸ்தான் அவரை சந்திக்க விரும்பினாராம்.

அது “ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு”. ஆனால், “தீயது” எதுவும் நடக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“ஆம், நான் அவரை (சோரோஸ்) அவரது வேண்டுகோளின் பேரில் சந்தித்தேன். (முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதீர் (முகம்மட்) சோரோஸை சந்தித்தப் பின்னர். அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

“அது வழக்கமான ஒரு மரியாதை காணல். முறைகேடானது ஒன்றுமில்லை, தீயது ஒன்றுமில்லை”, என்றாரவர்.