‘ஒருவேளை அம்னோவுக்கு ரிம40 மில்லியன் சோரோஸிடமிருந்து வந்திருக்குமோ’

உங்கள் கருத்து: “சம்பந்தப்பட்ட தொகை ரிம40 மில்லியன் என்ற அடிப்படையில், அது மூசா அமானாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் செய்திருந்தால் அது ரிம40 மில்லியனைவிட மிக அதிகமானதாக இருக்கும்.” 

ரிம40மில்லியன் எங்கிருந்து வந்தது என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும்

உண்மை சொல்: ரிம40மில்லியனை அரசியல் அன்பளிப்பு என்று சொல்வது எளிது. அப்படி அது அரசியல் அன்பளிப்பு என்றால் அதை நிரூபியுங்கள். இல்லையென்றால் அது சாபா முதலமைச்சர் மூசா ஆமானின் பணம் என்றுதான் பொருள்படும்.

இதை மேற்கொண்டு எப்படி விசாரிப்பது என்பது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்குத் தெரியாதா அல்லது அல்லக்கையைப் பாதுகாக்கும் முயற்சியாகத்தான் குற்றம் ஒன்றும் நடக்கவில்லை என்கிறார்களா?

குழப்பமற்றவன்: ஒருவேளை நாணய ஊகவணிகர் சோரோஸிடமிருந்து வந்திருக்குமோ. இரகசியமாக ஒருவர் மூலமாக அப்பணத்தைக் கொடுத்தனுப்பி, முடிவில் அப்பணம் எங்கிருந்து வந்தது என்பதைத் தெரியப்படுத்தி ஆளும் அரசுக்குச் சங்கடத்தை உண்டுபண்ணுவது அவரின் நோக்கமாக இருக்கலாம்.

நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா? மலேசிய அரசியலில் எதுவும் நடக்கலாம். சொரோஸ்தான் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாகக் கூறுகிறார்களே. அது உண்மையானால் இப்படியும் நடக்கலாம்தானே.

பூமிபுத்ரி: சம்பந்தப்பட்ட தொகை ரிம40 மில்லியன் என்ற அடிப்படையில், அது மூசா அமானாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் செய்திருந்தால் அது ரிம40 மில்லியனைவிட மிக அதிகமானதாக இருக்கும். 

கோபம்கொண்டவன்: அம்னோ அதன் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெறலாம். அதில் பிரச்னை இல்லை. மற்றவர்கள் பெற்றால்தான் அது சட்டவிரோதம். அம்னோ,  இரட்டை நாக்குக் கொண்டு பேசுவோரைக் கொண்ட ஒரு கட்சி.

அனைவருக்கும் நியாயம்: எல்லாம் மூடி மறைக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சட்டப்பூர்வமான பணம் என்றால் எதற்காகக் கடத்திவர வேண்டும். வங்கி மூலமாகவே மாற்றிவிட்டிருக்கலாமே. இது, தெள்ளத்தெளிவாகத் தெரியும் ஒரு ஊழல். ஆனாலும் அம்னோ சொல்வதை நம்பும் மடையர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அரீஸ்46: புதிதாக வரவுள்ள கள்ளக்குடியேறிகள் நீலநிற அடையாள அட்டைகளுக்காக முன்கூட்டியே அனுப்பி வைத்த பணமாகக்கூட இருக்கலாம்.

அதனால்தான் அப்பணம் சட்டப்பூர்வமானது என்று அமைச்சர் நஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.

அப்பணத்தைக் கடத்த முயன்றதன்வழி நாட்டுக்கு விசுவான ஒரு செயலைப் புரிய முனைந்த அக்குடிமகன் (வெட்டுமரத் தொழில் அதிபர் மைக்கல் சியா) மீது நடவடிக்கை எடுக்க முயன்ற ஹாங்காங்கின் சுயேச்சை ஊழல்தடுப்பு ஆணைய(ஐசிஏசி)த்தை நமது மதிப்புகுரிய எம்ஏசிசி கண்டிக்க வேண்டும்.

பூட்சி: வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதற்காக சுவாராமைக் குறை சொன்னார்கள். இப்போது அவர்கள் மட்டும் என்னவாம்?

முற்போக்கு: நஸ்ரியும் அம்னோ நம்மை முட்டாளாக்கப் பார்க்கக்கூடாது. ரிம40மில்லியன் சிங்கப்பூர் டாலருடன் பிடிபட்ட மைக்கல் சியா, அப்பணம் மூசாவுடையது என்று சொல்லியிருக்கிறாரே.

அவரே அப்படிச் சொன்னதை மற்றவர்கள் ஏன் மறுக்க வேண்டும்? இது ஊழலின் உச்சக்கட்டமாக அல்லவா இருக்கிறது.

 

 

 

 

TAGS: