“நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு என்ன கிடைத்தது ? எதுவுமில்லை ! நான் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிப்பேன்.”
பிரதமர் எச்சரிக்கை: பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை
மனிதன்: பாரிசான் நேசனம் செய்கிறது ? எதனைச் செய்கிறது ? நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு என்ன கிடைத்தது ? எதுவுமில்லை ! நான் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிப்பேன்.
ரோஹானா: 1997ம் ஆண்டு நாடு எதிர்நோக்கிய நிதி நெருக்கடிக்கு நாணய ஊக வணிகர் ஜார்ஜ் சோரோஸ் என கடந்த வாரம் நமக்குக் கூறப்பட்டது. அனைத்துலக பண நிறுவனத்துடன் ஒத்துழைத்த நமது அண்டை நாடுகள் எப்படி பெருத்த வெற்றியை அடைந்துள்ளன ? பக்காத்தான் ராக்யாட்டுக்கு சிலாங்கூரிலும் பினாங்கிலும் பொருளாதாரத்தை மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கு உயர்த்துவதற்குச் சில ஆண்டுகளே தேவைப்பட்டன.
நம்பாதவன்: திரு பிரதமர் அவர்களே தயவு செய்து மறைமுகமாக மருட்ட வேண்டாம். பிஎன் ஆட்சியில் இருந்தால் கூட நாடு திவாலாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை. உண்மையில் அம்னோ/பிஎன் சேவகர்கள் நடத்தும் ‘கொள்ளையால்’ மலேசியா கிரீஸுடன் இணைந்து கொள்ளும் சாத்தியமே அதிகமாக உள்ளது.
உங்களுக்கு 55 ஆண்டுகள் இருந்தன. மலேசியாவுக்கு நீங்கள் பெரிய பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தீர்கள். ஆனால் அவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஊழல், அநீதி, உறவினர்களுக்கு உதவுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். பக்காத்தான் ஆட்சி செய்யும் பினாங்கையும் சிலாங்கூரையும் பாருங்கள். அவை விவேகமாக செலவு செய்கின்றன. ஐந்து ஆண்டுகளில் நிறைய சாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் பக்காத்தான் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். பக்காத்தான் தனது கொள்கைகளை வெற்றிகரமாக அமலாக்குவதற்கு அது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
A.nb: நமது நம்பிக்கைக்கு பிஎன் துரோகம் செய்து விட்டது. அதனால் பிஎன் போக வேண்டும். பக்காத்தானுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போம். அதன் மாநில அரசாங்கங்கள் திறமையைக் காட்டியுள்ளன. பிஎன் மக்கள் பணத்தை முறையாக நிர்வாகம் செய்யவில்லை என்பது நமது 55 ஆண்டு கால அனுபவத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஜேபி சுவாரா: வழக்கம் போல பிரதமர் உரையில் சொல் அலங்காரம் காணப்படுகின்றது. உருப்படியாக ஏதுமில்லை. அதிகார அத்துமீறல்களை ஏற்றுக் கொள்கின்ற தேர்தல் சீர்திருத்தத்திற்குப் போராடிய பெர்சே பேரணி மீது பலத்தைப் பயன்படுத்தியது, குழப்பத்தை ஏற்படுத்த பெர்க்காசாவை அனுமதித்தது, எதிர்க்கட்சிகள் மீது மறைமுகமாக மருட்டல்களை விடுப்பது, திறந்த டெண்டர் முறை பற்றிப் பேசிக் கொண்டு டெண்டர் வழங்குவதில் தலையிடுவது ஆகியவற்றை அனுமதிக்கும் பிரதமர் அளிக்கும் வாக்குறுதிகளை நாங்கள் இனிமேலும் நம்பத் தயாராக இல்லை.
பிஎன்/அம்னோ ஆட்சியில் இருப்பதால் நாடு ‘தோல்வியுற்ற நாடு’ என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே அரசாங்க மாற்றமே சிறந்த தேர்வாகும்.
அல்பா: பிஎன் நாட்டை ஏற்கனவே திவால் நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. முந்திய பிஎன் மாநில அரசுகளைக் காட்டிலும் நல்ல முறையில் இயங்க முடியும் என்பதைப் பக்காத்தான் காட்டியுள்ளது.
ஊழல் மலிந்த பிஎன் அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு எங்களை மருட்ட வேண்டாம்.
அர்மகடோன்: பினாங்கு, கிளந்தான், சிலாங்கூர், கெடா ஆகியவை நன்றாக இயங்குகின்றன. யாரும் பட்டினியால் சாகவில்லை. அந்த மாநிலங்களில் ஊழல் இல்லை. அப்படி எதுவும் இருந்தால் பக்காத்தான் எதிர்ப்புப் போக்கைப் பின்பற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்னேரம் படுவேகமாக செயல்பட்டிருக்கும். அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி கண்டால் துணை வருமானம் இருக்காது என்பதே நஜிப்பின் கவலையாகும்.
Anonyxyz: பிஎன் உயிர்பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் தோல்வி கண்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என அதற்கு நன்கு தெரியும். பக்காத்தான் மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுமானால் அதற்குத் தொடர்ந்து வாக்குகள் கிடைப்பது திண்ணம்.
தனா55: நீங்கள் ஆட்சி செய்த 55 ஆண்டுகளைக் கொண்டு நாங்கள் உங்களை மதிப்பிட முடியும். டாக்டர் மகாதீர் முகமட் பிரதமரானது முதல் பேரழிவு தொடங்கி விட்டது. அம்னோவுக்கு மலேசியர்கள் மேலும் ஐந்து ஆண்டுகளைக் கொடுத்தால் அவர்கள் சரியான முட்டாள்கள் ஆவர். ஆனால் மலேசியர்கள் முட்டாள்கள் அல்ல. மசீச அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை கலைத்து விடலாம்.
என் எக்ஸ்: பிஎன் இந்த நாட்டுக்கு செய்ததை மதிப்பிட வேண்டுமானால் மலேசியாவை தென் கொரியாவுடன் ஒப்பு நோக்கினால் போதும். நாம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அதனை விட பின் தங்கியுள்ளோம்.
முஷிரோ: பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. ஏனெனில் 1) பக்காத்தான் மாநிலங்கள் நன்கு நிர்வாகம் செய்யப்படுவதாக தலைமைக் கணக்காய்வாளர் மதிப்பீடு செய்துள்ளார். 2) பினாங்கிலும் சிலாங்கூரிலும் உபரி வரவு செலவுத் திட்டங்கள். 3) முறைகேடான நிர்வாகம் ஏதுமில்லை. 4) பெரிய அளவில் ஊழல் ஏதுமில்லை. 5) அவற்றிடம் தெளிவான கௌரவமான கொள்கைகள் உள்ளன.
மீட்சியாளர்: பிரதமருக்கு உண்மை நிலை தெரியவில்லை. அவர் மக்கள் கூக்குரலை செவிமடுக்க முடியாத குகைக்குள் வாழ்கிறார். அல்லது இந்த முறை பிஎன் தோல்வி காண்பது திண்ணம் என அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு நாட்டை தவறாக வழி நடத்துகின்றார். அவர் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவது பெரிய பாவம்.