என்ஜிஒ போராளிகள் நிறுத்தப்படுகின்றனர், பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர்

“உண்மையான பயங்கரவாதிகள் மீது அதிகாரிகள் இசா சட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை. மாறாக தங்கள் அரசியல் எதிரிகள் மீது அதிகாரிகள் அதனைப் பயன்படுத்துகின்றனர்”

பயங்கரவாதிகள் நம்ம்மிடையே இருப்பதை ஹிஷாமுடின் ஒப்புக் கொள்கிறார்

ஜெடி_ஹு: போலீஸ் வளங்களைக் கொண்டு பெர்சே, சுவாராம், எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் அவற்றின் மீது வழக்குப் போடுகிறது. மிரட்டுகின்றது.

அவை பாதுகாப்புக்கு மருட்டல் எனச் சொல்லி விமான நிலையங்களில் அதன் தலைவர்களைத் தடுத்து நிறுத்துகின்றது. அதே வேளையில் ஆபத்தான பயங்கரவாதச் சக்திகளை இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்குவும் நுழைவதற்கும் அது அனுமதித்துள்ளது.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், நமது நாட்டுப் பாதுகாப்பை சீரழித்துள்ளார். கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நமது கல்வி முறையைப் பாழாக்கி வருகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டை  திவால் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

அப்படி இருந்தும் முட்டாள் மக்கள் அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க விரும்புகின்றனர்.

20121221பேரிடர்: அந்த உண்மையான பயங்கரவாதிகள் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (ரத்துச் செய்யப்பட்டு விட்ட) பயன்படுத்தியதே இல்லை. அதற்கு மாறாக தங்கள் அரசியல் எதிரிகள் எனத் தாங்கள் கருதுகின்றவர்கள் மீது மட்டுமே அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

சின்ன அரக்கன்: பல பயங்கரவாதிகள் மலேசியாவை இடை மய்யமாகப் பயன்படுத்தி வருகின்றனர் எனஉள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது.

நாட்டில் அந்த பயங்கரவாதிகளுடைய நடமாட்டத்தை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது என்பதையும் மலேசியா அவர்களது இலக்கு அல்ல என நம்புவதால் அவர்கள் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அது உணர்த்துகின்றது.

பல பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அரசாங்கம் தெரிந்தே அனுமதித்ததா ? மற்ற நாடுகளுக்கு அவர்கள் செய்யக் கூடிய தீங்கைப் பற்றி அது கவலைப்படாமல் இருந்ததா ? இது என்ன கொள்கை ?

சந்தேகத்துக்குரிய நபர்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்றும் மலேசியாவை  அல்லது மலேசியர்களை அவர்கள் இலக்காகக் கொண்டால் அதிகாரிகள் அவர்கள் மீது பாய்வர் என்றும் கூறுவது எரிச்சலைத் தருகிறது.

பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளுவது என்பது இது தானா ? பெரிய பெரிய ஊழல்களினால் நாடு ஏற்கனவே துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பயங்கரவாதச் சம்பவம் நிகழ்ந்தால் போதும் ஏற்கனவே நலிவாக உள்ள நமது பொருளாதாரம் முழுக்க முழுக்க சீரழிந்து விடும்.

நீலகிரி: அவர்கள் பயங்கரவாதிகள் எனத் தெரிந்த பின்னர் அவர்களை ஏன் கைது செய்யவில்லை. அவர்கள் நட்புறவான பயங்கரவாதிகளாக இருக்க முடியாது. நான் சொல்வது சரியா ?

அபாஸிர்: அந்த அமைச்சர் நம்மை வியப்படையச் செய்வதற்கு தவறுவதே இல்லை. அவர்கள் பயங்கரவாதிகள் என்பது அவருக்குத் தெரியும். அவர்கள் சுதந்திரமாக நாட்டுக்குள் வருவதும் வெளியே போவதும் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் எதுவுமே செய்யவில்லை.

கேஎஸ்என்: பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் உலக அளவிலானது. இந்த பூமியிலிருந்து பயங்கரவாதிகளைத் துடைத்தொழிக்க மலேசியா முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என நான் நம்புகிறேன்.

நீங்கள் அந்த வேவுத் தகவல்களை அனைத்துலக சமூகத்துடன் பகிர்ந்து கொண்டீர்களா ?

நம்பிக்கையுள்ள டாக்: அவர்கள் கண்காணிக்கப்பட்டனரா ? உயிர்கள் இழக்கப்படும் வரையில் எதுவும்செய்யப்பட மாடாது. இது என்ன விளக்கம் ?

அவர்கள் பயங்கரவாதிகள் எனத் தெரிந்த பின்னர் தேசிய மிரட்டலாக இருப்பதாகக் கூறி அவர்களை இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கலாமே ?

ஆனால் டி சட்டைகளை வைத்திருந்ததற்காக (தேசிய மிரட்டல் என உள்துறை அமைச்சர் கருதினார்) பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். நம்பவே முடியவில்லை.

அடையாளம் இல்லாதவன்$&@?: எப்போதும் குழப்பமாக பேசும் அந்த அமைச்சருக்கு எதற்கு முன்னுரிமைகொடுப்பது என்றே தெரியவில்லை. என்ஜிஓ என்னும் அரசு சாரா அமைப்புக்களின்  போராளிகளையும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் கைது செய்ய இசா சட்டம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்நிய பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர்.

மலேசியாவை தங்களது நடவடிக்கைத் தளமாக மலேசியாவை அமைத்துக் கொள்ளுமாறு  பயங்கரவாதிகளுக்கு ஊக்கமூட்டுவதற்கு ஹிஷாமுடின் சுற்றுப்பயண அமைச்சருடைய உதவியை நாடலாம்

TAGS: