மலேசியாவில் தஞ்சம் அடைய வந்த மியன்மார் படகு கவிழ்ந்தது; 130 பேர் மாயம்

டாக்கா: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு தஞ்சம் அடைய படகில் வந்தபோது வங்கதேச கடற்பரப்பில் மாயமான 130 பேரை அந்நாட்டு கடலோரக் காவல்படை தேடி வருகிறது.

மியான்மரில் குடியேறிய வங்கதேச நாட்டவர் தங்களுக்கும் குடியுரிமை கோருகின்றனர். ஆனால் பூர்வகுடிகள் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இம்மோதல்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மியான்மரின் ரோஹிங்கியா என்ற முகாமில் தங்கி இருந்தோரிலு 130 பேர் படகு மூலம் மலேசியாவில் தஞ்சம் அடைய வந்து கொண்டிருந்தனர். இப்படகு வங்கதேச கடற்பரப்பில் சென்ற போது கவிழ்ந்தது. இதில் அனைவருமே கடலில் மூழ்கினர். அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் மூழ்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது அனைவரையும் மீட்கும் பணியில் வங்கதேச கடலோரக் காவல்படை மேற்கொண்டு வருகிறது.