பினாங்கு ரிம262 மில்லியன் பற்றாக்குறை பட்ஜெட்டை அறிவித்தது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ரிம262 மில்லியன் பற்றாக்குறை பட்ஜெட் ஒன்றை இன்று தாக்கல் செய்தார்.

2013-இல் வரவு ரிம 708 மில்லியனாகவும் செலவு ரிம970 மில்லியனாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக லிம் கூறினார்.

“மாநில அரசின் சேமிப்பு 2011 முடிய ரிம710 மில்லியனாக இருந்தது.அதைக் கொண்டு பற்றாக்குறை சரிக்கட்டப்படும்”, என்றவர் தெரிவித்தார்.

2013-க்குக் கிட்டத்தட்ட ரிம1 பில்லியன் பட்ஜெட்டை லிம் தாக்கல் செய்துள்ளார்.

துல்லியமாகச் சொல்வதாக இருந்தால் ரிம970,561,310. 2012க்கான ரிம599.60 மில்லியன் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது பட்ஜெட்டில் ரிம370,965,987 அல்லது 61.86விழுக்காடு கூடியுள்ளது.

TAGS: