‘ஒராங் அஸ்லி விவகாரத்தில் அமைச்சர் கன்னத்தில் அறைய வேண்டும்’

உங்கள் கருத்து: ‘அத்தகைய சிறிய சம்பவம் மீது கூட ஷாபி அப்டாலை நம்ப முடியாது என்றால் பெரிய விஷயங்களில் நாம் எப்படி அவரை நம்ப முடியும் ?’

ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையபட்டது தொடர்பில் அரசு அமைப்புக்கள் மன்னிப்புக் கேட்டன.

குழப்பம் இல்லாதவன்: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் மீது புத்ரா ஜெயாவிலிருந்து சென்ற பேராளர் உட்பட கல்வித் துறை அந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாக அந்தப் பிள்ளைகள் கன்னத்தில் அறையப்படவே இல்லை என அம்னோவுக்கு வாதாடும் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் கூறியிருந்தார்.

வளைந்த நாக்கைக் கொண்ட பிஎன் அரசாங்கம் முரண்பாடாக அறிக்கைகளை விடுவதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அது இன்னொரு தக்க சான்று ஆகும். என்ன பரிதாபம் !

அடையாளம் இல்லாதவன்#41809171: பிள்ளைகள் கன்னத்தில் அறையப்படவே இல்லை என அவர் சொன்னதற்கு இரண்டு விளக்கங்களைக் கூறலாம். ஒன்று அவர் பொய் சொல்லும் அளவுக்கு முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது கல்வித் துறையும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் அவரிடம் பொய் சொல்லியிருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் சிலர் கன்னத்தில் அறையப்பட வேண்டும். பதவி இறக்கம் செய்யப்படவும் வேண்டும்.

தோலு: ஷாபி அப்டால் அவர்களே இப்போது உங்கள் முகத்தை எங்கே மறைத்துக் கொள்ளப் போகிறீர்கள் ? ‘சில சமயங்களில் அந்த விஷயங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகின்றன, ‘பகை உணர்வைத் தூண்டி விட அந்த விஷயங்கள் எழுப்பப்படுகின்றன’ என நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள்.

யாருக்கும் யாருக்கும் இடையில் பகை உணர்வு ? அந்த விஷயத்துக்கு அரசியல் சாயம் பூசுவது யார் ?

அந்தச் சம்பவம் மீது புகார் செய்த பெற்றோர்கள் அரசியல் ஆதாயம் தேடவில்லை. முஸ்லிம் அல்லாத தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயமாக இஸ்லாமியப் போதனைகள் நடத்தப்படுவதைப் பற்றியே அவர்கள் கவலை கொண்டுள்ளனர். அது எப்படி அரசியல் விஷயமாகும்.

வெறுப்பைத் தூண்டும் அம்னோ தந்திரத்துக்கு இணங்க நீங்கள் அந்த விஷயத்துக்குள் இனவாத, சமயவாத அம்சத்தை நுழைத்து அரசியல் சாயம் பூசுகின்றீர்கள்.

டி: இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. தவறை விரைவாகத் திருத்திய கல்வி அமைச்சு நல்ல வேலை செய்துள்ளது. பொய்களை அவிழ்த்து விட்டதற்காக ஷாபி அப்டால் இப்போது மன்னிப்புக் கேட்பாரா ?

லம்போர்கினி: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் உண்மையில்  நன்மை செய்துள்ளது. மலாயாவின் உண்மையான பூமிபுத்ராக்கள் மிரட்டப்படுவது பொது மக்களுடைய கவனத்தை பெற்றுள்ளது.

அஸாம்கோ: கல்வி அமைச்சு நல்ல உணர்வுடன் செயல்பட்டுள்ளது. அந்த விஷயத்தைக் கண்துடைப்புச் செய்யமுயன்றதற்காக ஷாபி அப்டால் வெட்கப்பட வேண்டும்.

மிகவும் உணர்ச்சிகரமான அந்த சிறிய சம்பவம் மீது கூட ஷாபி அப்டாலை நம்ப முடியாது என்றால் பெரிய விஷயங்களில் நாம் எப்படி அவரை நம்ப முடியும் ?

தாய்லெக்: உண்மை நிலவரத்தை அறியும் முன்னரே கருத்துத் தெரிவிக்கும் அம்னோ அமைச்சர்களுக்கு ஷாபி அப்டால் ஒர் எடுத்துக்காட்டு. முதலில் மறுப்பது அல்லது தாங்கள் தவறாக மேற்கோள் ஊடகங்களைக் குற்றம் சாட்டுவது அல்லது எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவது ஆகியவையே அவர்களது வழக்கமான நடைமுறையாகும்.

அந்தச் சம்பவம் மீது கல்வி அமைச்சும் ஒராங் அஸ்லி விவகாரத் துறையும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளன. அந்தச் சம்பவம் நிகழவே இல்லை என அமைச்சர் தொடர்ந்து மறுக்கப் போகிறாரா ? அந்த விவகாரத்தில் அமைச்சர் கன்னத்தில் அறைய வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

TAGS: